சந்தர்ப்பவாதம் பெற்றெடுத்த சைத்தான் தான் திமுக கூட்டணி: ஜெ.

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி:

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளிலும் பேசி கிருஷ்ணகிரி தொகுதியில் ஓட்டு வேட்டையாடினார்முதல்வர் ஜெயலலிதா.

கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, தளி, ஒசூர் போன்ற பகுதிகளில் ஏராளமான கன்னட மற்றும் தெலுங்கு மொழிபேசும் மக்கள் வசிக்கின்றனர். இதனால் ஒசூரில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் கருணாநிதி, தமிழில் எழுதிவைத்துக் கொண்டு தெலுங்கில் அதைப் படித்து ஓட்டு கேட்டார்.

இந் நிலையில் கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் நஞ்சே கெளடுவுக்காகப் பிரச்சாரம் செய்த ஜெயலலிதாமிகச் சரளமாக தெலுங்கு, கன்னட மொழிகளில் பேசி ஓட்டு கேட்டார்.

அவர் பேசியதாவது:

நஞ்சே கெளடு மிகவும் நல்லவர். இந்த நாட்டை யார் ஆள வேண்டும்? ஆற்றலும். திறமையும் மிக்க வாஜ்பாயா?இல்லை அன்னியரான அரைவேக்காட்டு சோனியாவா?

உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் உங்களுக்கு நாளொன்றுக்கு 20 மணி நேரம் உழைக்கிறேன்.

இந்தியா வல்லரசாக பா.ஜ.க-அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். சந்தர்ப்பவாதி கருணாநிதி, வாய்ச் சவடால்வைகோ, ஜாதி வெறியர் ராமதாசுக்கு பாடம் கற்பியுங்கள். சந்தர்ப்பவாதம் பெற்றெடுத்த சைத்தான் தான் திமுககூட்டணி என்றார்.

பின்னர் தெலுங்கில் அவர் பேசியதாவது: அந்திரிக்கி வந்தன முலு, சாலா சந்தோஷம், நஞ்சே கெளடு சாலாமஞ்சிவாரு என்றார்.

கன்னடத்தில் அவர் பேசுகையில், எல்லிரிகே நமஸ்காரா, நிம்மன நோடிதல்லி தும்ப சந்தோஷா, நஞ்சே கெளடுதும்ப ஒல்வேவரு.. அவருகே ஓட் ஆக்கி என்றார்.

இதற்கு அர்த்தம்: அனைவருக்கும் வணக்கம், உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, நஞ்சே கெளடு ரொம்பநல்லவரு.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

என் சக்தியெல்லாம்... ஜெயலலிதா:இதையடுத்து சென்னை திரும்பிய ஜெயலலிதா இன்று நிருபர்களிடம் பேசுகையில்,

பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் சோனியா வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பது தான் இந்தத் தேர்தலின் முக்கியப்பிரச்சனை என்றார்.

தேர்தலுக்குப் பின் சோனியாவைத் தவிர்த்துவிட்டு வேறொருவரை பிரதமர் பதவிக்கு நிறுத்தினால் காங்கிரசைஆதரிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, நேரடியாக பதில் தராத ஜெயலலிதா, யூகங்களுக்குள் நான் போகவிரும்பவில்லை. இப்போதைக்கு என் சக்தியெல்லாம் கூட்டணி வெற்றிக்காகவே செலவி விரும்புகிறேன் என்றார்.

திமுக கூட்டணியில் ஏகப்பட்ட தலைவர்கள் இருக்கிறார்கள், உங்கள் கூட்டணியில் நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள்என்று கேட்டதற்கு,

நிறைய பேர் இருந்தால் என்ன?. எண்ணிக்கை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. பாண்டவர்கள் 5 பேர் தான்.கெளரவர்கள் 100 பேர். இறுதியில் வென்றது யார்? என்று எதிர் கேள்வி கேட்டார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+