இந்தாண்டு இறுதியில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு!
சென்னை:
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று தெரிகிறது.
தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே, காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாகநிலவும் பிரச்சினைக்குத் தீர்வு காண கடந்த வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் பலமுறை கூடி விசாரணை நடத்தியது. இறுதித் தீர்ப்பை வழங்கும் வரை தமிழகத்துக்குஆண்டுதோறும் 64 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என இந்த மன்றம் கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.
இந் நிலையில் வரும் 4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டெல்லியில் மீண்டும் இந்த நடுவர் மன்றம் கூடிவிவாதிக்கவுள்ளது. இதைத் தொடர்ந்து ஜூன் அல்லது ஜூலையில் மீண்டும் இந்த மன்றம் கூடுகிறது.
அதன் பின்னர் இந்த ஆண்டு இறுதியில் தனது இறுதித் தீர்ப்பை வெளியிட இந்த மன்றம் முடிவு செய்துள்ளது.
1942ம் ஆண்டு தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகியவற்றுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி தமிழகத்திற்குஆண்டுக்கு 576 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் தர வேண்டும். அதன் பின்னர் இது 489 டிஎம்சி தண்ணீராககுறைக்கப்பட்டது.
இருப்பினும் இந்த தண்ணீரைக் கூட கர்நாடகம் தருவதில்லை. கடந்த 40 ஆண்டுகளில் மொத்தமே 350 டிஎம்சிதண்ணீரை மட்டுமே கர்நாடகம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளில் இந்த நிலை படு மோசமாகமாறியது.
இடைக்காலத் தீர்ப்பாக ஆண்டுதோறும் 64 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்றத்தின்தீர்ப்பையும் கர்நாடகம் ஏற்கவில்லை. மேலும், இந்த இடைக்காலத் தீர்ப்பை அமலாக்குமாறு உச்ச நீதிமன்றம்பலமுறை உத்தரவிட்டும் அதையும் கர்நாடகம் ஏற்கவில்லை.
இதற்காக உச்ச நீதிமன்றம் பலமுறை கர்நாடகத்தை கண்டித்துள்ளது. மேலும், பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவுகளையும் கர்நாடகம் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகிறது.
இந் நிலையில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக தமிழகம் மட்டுமல்லாது கேரளம் மற்றும் புதுவைஆகிய மாநிலங்களும் காத்துக் கொண்டுள்ளன.












Click it and Unblock the Notifications