எஸ்மா- நீடிப்பது ஏன்? ஜெவுக்கு அரசு ஊழியர்கள் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தலுக்குப் பின் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க மாட்டேன் என்று அறிக்கை விட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா,எஸ்மா- சட்டத்தை நீட்டித்திருப்பது ஏன் என்று அரசு பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு என்.ஜி.ஓ. யூனியன் முன்னாள் பொதுச் செயலாளர் சுப.சீதாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டிருப்பதாவது:

அரசு ஊழியர்கள் எவர் மீதும் எனக்கு எந்த வெறுப்போ அல்லது காழ்ப்புணர்ச்சியோ இல்லை என்று கூறும் ஜெயலலிதா எஸ்மாசட்டத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்தது ஏன்? வேளை நிறுத்தத்தின் போது டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் 30க்கும் மேற்பட்டஅரசு ஊழியர்கள் இறந்தனர்.

அவர்கள் குடும்பத்தினருக்கு ஜெயலலிதா செய்த பரிகாரம் என்ன? வெறும் பசப்பு வார்த்தைகள் பரிகாரம் ஆகி விடாது. ஆனால்முதல்வர் செய்த பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அரசு ஊழியர்கள்- பரிகாரம் காணும் நாள் தான் மே 10 ஆகும். இதைஜெயலலிதா புரிந்துகொள்ளும் நாள் தான் மே 13 என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் கு.பாலசுப்பிரமணியம், பொதுச் செயலாளர்பி.எஸ்.செளந்தரபாண்டியன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எதிர்க்கட்சியினரின் தூண்டுதலால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு அரசுடன் ஒரு மோதல் போக்கை உருவாக்கினார்கள் என்றுகுறிப்பிட்டுள்ளார். எந்த கட்சி தூண்டுதலாலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை.

அரசு வருவாயில் 94 சதவீதம் அரசு ஊழியர்களின் ஊதியத்திற்காகவும் ஓய்வூதியத்திற்காகவும் செலவு செய்யப்படுகிறது என்றுஉண்மைக்கு மாறான ஒரு தோற்றத்தை உருவாக்கி மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடைவெளியினை உருவாக்கமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அரசு தனது ஊழியர்களை அரவணைப்பதற்கு பதிலாக மக்களின் எதிரி என சித்தரிப்பது நியாயமில்லை. பணி நீக்கத்தில் இருந்துவிடுபட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வெட்டு போன்ற தண்டனைகள் இன்னமும் தொடர்கிறது. பலருக்கு பதவி உயர்வுபாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+