மேட்டூர் அணை திடீர் திறப்பு: வருகிறது தேர்தல் தண்ணீர்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணையை திறக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் அணை திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லை. மொத்தம் 120 அடி கொள்ளளவு கொண்ட அணையில்தற்போது 28 அடி மட்டுமே நீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்தும் மிக மிக குறைவாக உள்ளது.
இதனால் அணை மூடப்பட்டுள்ளது. இந் நிலையில் திடீரென்று அணையைத் திறக்குமாறும் மறு உத்தரவு வரும்வரை நீர் திறந்து விடுமாறும் கூறி தமிழக அரசு, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. ஈரோடு, கரூர் மாவட்டங்களில் நிலவும்வறட்சியை கணக்கில் கொண்டு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும் கூட,தேர்தலை மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications