புதுவை அதிமுகவின் அங்கீகாரம் ரத்தாகுமா?
பாண்டிச்சேரி:
தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட புதுவை பாண்டிச்சேரி அதிமுகவின் அங்கீகாரத்தை ஏன் ரத்துசெய்யக் கூடாது என்று கேட்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு புதுவை மாநில அதிமுக செயலாளர்அன்பழகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா புதுவையில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்திற்குஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது ஜெயலலிதாவை வரவேற்று, கனகசெட்டிக்குளம் என்ற இடத்திலிருந்துகன்னிகோவில் என்ற இடம் வரை சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு வழி நெடுகிலும் அதிமுக கொடிகளும்,பேனர்களும் கட்டப்பட்டிருந்தன.
இதுகுறித்து காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்குப் புகார் அனுப்பின. தேர்தல்ஆணைய விதிமுறைகளை மீறி அதிமுகவினர் சாலை நெடுகிலும் தங்களது கொடிகளையும், பேனர்களையும்கட்டியுள்ளதாக தங்களது புகாரில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து அன்பழகனுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது. அதில், தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டுள்ளதால், ஏன் உங்களது கட்சியின் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யக் கூடாது என்றுகூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்திற்கு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் புகாரை அன்பழகன் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம்கூறுகையில், பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்த எங்களது தலைவிஜெயலலிதாவை வரவேற்று அதிமுக கொடிகளையும், பேனர்களையும் வைத்திருந்தோம்.
ஆனால் கொடிகளையும், பேனர்களையும் வைத்த பிறகே, இதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடையாது,எனவே உடனடியாக அகற்றுமாறு மாநில பொதுப்பணித்துறை எங்களுக்குக் கடிதம் எழுதியது.
கொடிகளையும், பேனர்களையும் வைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறைக்கு முன்பே கடிதம் எழுதியிருந்தோம்.ஏப்ரல் 2ம் தேதி அனுமதி கொடுத்து பொதுப்பணித்துறை கடிதம் எழுதியது. அதன் அடிப்படையிலேயேகொடிகளையும், பேனர்களையும் நாங்கள் வைத்தோம்.
ஆனால் கடைசி நேரத்தில் பொதுப்பணித்துறை அனுமதி மறுத்துள்ளதாக வாய் மொழியாக ஏப்ரல் 6ம் தேதிஎங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்றார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications