சிவகாசிக்கு மத்திய படை வேண்டும்: தாமரைக்கனி கோரிக்கை
சிவகாசி:
சிவகாசி தொகுதியில் ஆளுங்கட்சியினர் பெருமளவில் முறைகேடுகள், வன்முறையில் ஈடுபடும் வாய்ப்புஉள்ளதால் அந்தத் தொகுதியில் விசேஷ கவனம் எடுத்து மத்திய படைகளை குவிக்க வேண்டும் என்று சிவகாசிதொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளரான தாமரைக்கனி கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவகாசி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அதிமுக பிரபலமான தாமரைக்கனிஅமர்த்தப்பட்டுள்ளார். இத்தொகுதியில் மதிமுக சார்பில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.
ரவிச்சந்திரனின் வெற்றிக்காக தாமரைக்கனி கடுமையாக உழைத்து வருகிறார். தொகுதி முழுவதும் பம்பரமாகசுழன்று பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் ரவியின் வெற்றியை உறுதி செய்து வருகிறார்.
இந் நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு அவர் ஒரு மனுவை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், வாக்குப் பதிவுதினத்தன்று சிவகாசி தொகுதியில் பெருமளவில் முறைகேடுகளில் ஈடுபடவும், வன்முறையைத் தூண்டி விடவும்,மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் இன்பத்தமிழன் (தாமரைக்கனியின் மகன்தான்) தலைமையில் திட்டம்தீட்டப்பட்டுள்ளது.
எனவே சிவகாசி தொகுதியில் மத்திய படைகளை அதிக அளவில் குவித்து, வாக்குச் சாவடிகளில் வீடியோஎடுக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். சிறப்பு தேர்தல் பார்வையாளர்களையும் இங்கு நியமிக்க வேண்டும் என்றுகோரியுள்ளார் தாமரைக்கனி.
எப்போதுமே தடாலடியாகவும், அதிரடியாகவும் அரசியல் செய்யும் தாமரைக்கனி தற்போது தனது மகன்இன்பத்தமிழனுக்கு எதிராக முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறார். ஜெயலலிதாவை திருப்திப்படுத்துவதற்காக,அரசியல் கற்றுக் கொடுத்த தன்னையே துச்சமாக மதிக்கும் மகனுக்கு தக்க பாடம் புகட்டுவதற்காக கிடைக்கும்ஒவ்வொரு வாய்ப்பையும் அவர் மிகச் சரியாக பயன்படுத்தி வருகிறார்.
சிவகாசி தேர்தலிலும் தனது மகனுக்கு பெரும் அடியைக் கொடுக்கும் விதத்தில், ரவிச்சந்திரனை மிகப் பெரும்வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற வெறியுடன் அவர் மிகத் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.
வேட்பாளருக்கு இருக்கும் செல்வாக்கை விட தாமரைக்கனிக்கு இப்பகுதியில் நல்ல பெயர் இருப்பதால்,அப்பாவை எதிர்த்து களம் காண முடியாமல் இன்பத் தமிழன் தவித்து வருகிறார் என்பதுதான் உண்மை.












Click it and Unblock the Notifications