சோனியா-- கருணாநிதி பிரசாரம் 7ம் தேதிக்கு மாற்றம்
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி- திமுக தலைவர் கருணாநிதி இணைந்து பங்கேற்கும் தேர்தல் பிரசாரபொதுக்கூட்டம் வரும் 6ம் தேதியிலிருந்து 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மே 5-ம் தேதி (புதன்கிழமை) பிரதமர் வாஜ்பாய், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டம் தீவுத் திடலில்நடக்கிறது. சோனியா - கருணாநிதி பங்கேற்கும் கூட்டம் அதே இடத்தில் மே 6-ல் நடப்பதாக இருந்தது.
பிரதமரின் கூட்டத்திற்குப் பின் சோனியா கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான அவகாசம்போதுமானதாக இருக்காது என்ற காரணத்தால்7-ம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
7ம் தேதிமாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் சோனியா, கருணாநிதி மற்றும் ஜனநாயக முற்போக்குக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள இதர தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
பிரதமர் கூட்டத்துக்கு அமைக்கப்படும் அதே மேடை ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கூட்டத்துக்கும்பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications