இறந்துபோன குற்றவாளி 8 ஆண்டுகளுக்குப் பின் உயிருடன் பிடிபட்டான்
மதுரை:
இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட கொலைக் குற்றவாளியை 8 ஆண்டுகளுக்குப் பின் போலீஸார் கைது செய்தனர்.
மதுரையைச் சேர்ந்த பெண் நாகஜோதி. இவரை செல்வம் என்பவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதனையடுத்துசெல்வமும், பாலமுருகன் என்ற அவரது நண்பரும் நாகஜோதியுடன் கேரளாவுக்கு ரயிலில் கிளம்பினர்.
அங்கு நாகஜோதியை செல்வம் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவதாகத் திட்டம். இதைத் தெரிந்து கொண்டநாகஜோதியின் அண்ணன் சங்கிலிக்கருப்பன் என்பவர் செல்வத்தைத் தடுத்தார். இதனையடுத்து நடந்த மோதலில்சங்கிலிக்கருப்பன் ஓடும் ரயிலில் கொல்லப்பட்டார். இது நடந்தது 1992ம் வருடம்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், நான்கு வருட தேடலுக்குப் பின் 1996ம் வருடம் செல்வத்தையும்,பாலமுருகனையும் கைது செய்தனர். பின்னர் இருவர் மீதும் மதுரை மாவட்டத்தில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகபோலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதே வருடம் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது, செல்வம் போலீஸ் காவலில் இருந்துதப்பியோடினார். சில மாதங்களுக்குப் பின், மதுரை அவனியாபுரத்தில் ஒரு வாலிபரின் பிணத்தைக் கண்டுபிடித்த போலீஸார்,
அது செல்வம்தான் என்றும் அடையாளம் தெரியாத கும்பலால் கொலை செய்யப்பட்டதாகவும் கூறி செல்வம் தொடர்பானவழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
இந் நிலையில் இறந்த போனதாகக் கூறப்பட்ட செல்வம் சென்னையில் ஒரு இறைச்சிக் கடை வைத்து ஜாலியாக வாழ்க்கைநடத்துவது போலீஸாருக்குத் தெரியவந்தது. இதனையடுத்து சென்னைக்கு விரைந்த போலீஸ் படை செல்வத்தைக் கைது செய்தது.இப்போது செல்வம் உயிருடன் (!) காவலில் இருக்கிறார்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications