கோவிலில் பிரசாரம்!
கோவை:
இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராமகோபாலன் பா.ஜ.க- -அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக கோவிலில்பிரச்சாரம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதால், ராமகோபாலன் பிரச்சாரம் செய்ய போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து கோவை மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிபெறவேண்டும்என்பதற்காக நகரில் உள்ள முக்கிய கோவில்களில் ராமகோபாலன் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
பேரூர் கோவில், உக்கடம் லட்சுமி நரசிம்மன் கோவில், இடையர்வீதியில் உள்ள வெள்ளி விநாயகர் கோவில்,செட்டி வீதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அவர் பூஜை நடத்தினார். அம்மன் கோவிலில் பூஜைக்குப்பின் ராமகோபாலன் அங்கு நின்றிருந்த பக்தர்களிடம் பா.ஜ.கவுக்கு வாக்களிக்குமாறு திடீரென பிரச்சாரத்தில்ஈடுபட்டார்.
அவருக்கு பாதுகாப்புக்கு வந்த போலீசார் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசாருக்கும், இந்துமுன்னணி பிர முகர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் காவல்துறை உயர்அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சமரசம் செய்து வைத்தனர்.
பிறகு ராமகோபாலன் ஆர்.எஸ்.புரம் ரத்தினவிநாயகர் கோவிலுக்கு சென்று பூஜை நடத்தினார். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய ராமகோபாலன் போலீசார் மீது பாய்ந்தார். அவர் கூறுகையில்,
இந்து முன்னணி அரசியல் கட்சி இல்லை என்று பிரசாரம் செய்வதற்கு போலீஸார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.தொண்டர்கள் இடையே வாஜ்பாய்க்கு ஆதரவு திரட்டினேன். அப்போது போலீசார் தடுத்தனர். வீடு, வீடாகச்சென்று ஆதரவு திரட்டுகிறேன் என்று கூறியதற்கு, கைது செய்வோம் என்று போலீசார் மிரட்டினார்கள் என்றார்.
இதற்கிடையே ராமகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளதாக திருப்பூரில் ஒரு கும்பல் வதந்தியைக் கிளப்பிவிட்டது.
இதையடுத்து நம்பியூரில் இருந்து திருப்பூருக்கு சென்று கொண்டு இருந்த அரசு டவுன் பஸ் பிச்சம்பாளையம்புதூர்அருகே சென்றபோது கல்வீசி தாக்கப்பட்டது.
இதில் பஸ் கண்ணாடி நொறுங்கியது. டிரைவர் கண்ணப்பன் காயம் அடைந்தார். இதேபோல் பாண்டியன் நகரில்இருந்து திருப்பூருக்கு வந்த அரசு பஸ் மீதும் ஒரு கும்பல் கல் வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் பஸ் கண்ணாடிஉடைந்தது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications