அரசு ஊழியர்கள் மீது ஜெ. திடீர் பரிவு ஏன்? ராமதாஸ், சிதம்பரம் கேள்வி
சென்னை:
அரசு ஊழியர்கள் மீது முதல்வர் ஜெயலலிதா திடீர் என்று பரிவு காட்டுவது ஏன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்,காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை தலைவர் ப.சிதம்பரம் ஆகியோர் கேள்வி கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 3 ஆண்டுகளாக அரசு ஊழியர்களையும்,ஆசிரியர்களையும் படாதபாடு படுத்தி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பல்வேறுவகைகளில் கொடுமைப்படுத்தி வந்த ஜெயலலிதா இப்போது தேர்தல் நெருங்குவதால் அவர்கள் மீது பாசத்துடன்இருப்பதாக நாடகமாடுகிறார்.
ஜெயலலிதாவின் "பாசத்தை" அரசு ஊழியர்கள் நன்கு உணர்வார்கள். கடந்த ஆண்டுகளில் நடந்த கொடுமைகளை,வேதனைகளை அவர்கள் மறக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
இதேபோல, காங்கிரஸ் ஜனநாயக பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஜெயலலிதாவின் பாசம் விந்தையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. ஒரே நாளில் ஒரு லட்சம் அரசுஊழியர்களையும், ஆசிரியர்களையும் டிஸ்மிஸ் செய்ததை அரசு ஊழியர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும்மறக்கவே மாட்டார்கள். ஜெயலலிதாவின் நடிப்பை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications