அதிமுக கூட்டணி வென்றால் வாஜ்பாய் தான் காரணம்: திரு
சென்னை:
தமிழகத்தில் அதிமுக-பா.ஜ.க. கூட்டணி வென்றால், அதற்கு முதல் காரணம் வாஜ்பாய் தான் என மத்திய அமைச்சர்திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:
நாடு முழுவதும் வாஜ்பாய் அலை வீசுகிறது. வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும்வெல்லும். பாஜக மட்டும் 300 தொகுதிகளைப் பிடிக்கும்.
வாஜ்பாயின் செல்வாக்கு, 5 ஆண்டு ஆட்சியின் சாதனைகள் ஆகியவை வெற்றிக்கு வழி தேடித் தரும். காங்கிரஸ்கட்சியி தலைவர்களுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
பாஜகவில் நான் அதிருப்தியுடன் இருப்பதாகவும், எனவே பா.ஜ.கவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கப்போவதாகவும் வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை.
தனித்து நின்றாலே வெற்றி பெறும் செல்வாக்கு எனக்குண்டு. பா.ஜ.கவை விட்டு விலக வேண்டுமெனில் இப்போதேவிலகி போட்டியிட மாட்டேனா? வாஜ்பாய் தலைமையை ஏற்று தொடர்ந்து செயல்படுவேன்.
தமிழர்கள் அதிகம் வாழும் டெல்லி, மும்பை, அந்தமான் போன்ற இடங்களில் பா.ஜ.கவுக்காக பிரச்சாரம்செய்தேன். இப்போது பா.ஜ.க. போட்டியிடும் 7 தமிழக தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்கிறேன்.
புதுக்கோட்டையிலும் பிரச்சாரம் செய்ய ஆசை தான். ஆனால், தொகுதி வேட்பாளரின் பொறுப்பாளர்கள்(அதிமுக) ஏற்பாடு செய்யாமல் எப்படிப் போய் பேச முடியும்?
தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற்றால் முதல் காரணம் வாஜ்பாயாக இருப்பார். அடுத்தது கொள்கை, பா.ஜ.க.அரசின் சாதனைகள், தேசிய அளவிலான கூட்டணி, காங்கிரசின் பலவீனம் போன்றவை காரணமாக இருக்கும்(வெற்றிக்கு அதிமுக காரணமாக இருக்காது என்பதையே இவ்வாறு சொன்னார் திருநாவுக்கரசர்).
புதுக்கோட்டை தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று நிருபர்கள் கேட்டபோது,சிரித்துக் கொண்டே, தமிழகத்தில் எப்படி உள்ளதோ அப்படித்தான் புதுக்கோட்டையிலும் உள்ளது என்றார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications