திருப்பூர், சென்னையில் வாஜ்பாய் நாளை பிரசாரம்
சென்னை:
அதிமுக - பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகத்தில் பிரதமர் வாஜ்பாய் நாளை (புதன்கிழமை) பிரசாரம்செய்கிறார். இதையொட்டி கோவை, திருப்பூர் மற்றும் சென்னை நகரங்களில் மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
தான் போட்டியிடும் தொகுதியான லக்னோவில் நாளை நடக்கும் தேர்தலில் வாக்களித்துவிட்டு, தனி விமானம்மூலம் வாஜ்பாய் பகல் 1.10 மணிக்கு கோவை வருகிறார். அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் விருந்தினர் இல்லத்தில்சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஹெலிகாப்டர் மூலம் 3.45 மணிக்கு திருப்பூர் செல்கிறார்.
திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கோவை மக்களவைத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர்சி.பி.ராதகிருஷ்ணனுக்கு ஆதரவாகப் பேசுகிறார். பின்பு ஹெலிகாப்டர் மூலம் கோவை திரும்பும் வாஜ்பாய் தனிவிமானத்தில் 6.30 மணிக்கு சென்னை வருகிறார்.
சென்னை தீவுத்திடலில் இரவு 7 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரதமர்வாஜ்பாய் பங்கேற்கிறார். சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் ஒரே மேடையேறுவது இதுவே முதல்முறை.
கூட்டத்துக்குப் பின் இரவு 8.30 மணிக்கு தனி விமானம் மூலம் வாஜ்பாய் டெல்லி திரும்புகிறார்.
வாஜ்பாயின் தமிழக வருகையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவை, திருப்பூர், சென்னையில் பிரதமரின் கருப்புப் பூனைப் படையினர் முகாமிட்டு பாதுகாப்புப் பணிகளைநேரடியாகக் கண்காணித்து வருகின்றனர். சென்னை தீவுத்திடல் மைதானத்தில் மோப்ப நாய்கள் மற்றும்வெடிகுண்டு நிபுணர்கள் அடிக்கடி சோதனை நடத்துகின்றனர்.
மழையால் தீவுத் திடலில் தண்ணீர் தேங்கியதையடுத்து லாரிகளில் மணல் கொண்டு வரப்பட்டு, மேடாக்கப்பட்டுவருகிறது. மேடை அமைக்கும் பணியை அமைச்சர் பொன்னையன் நேரில் பார்வையிட்டார். நாளை பொதுக்கூட்டத்துக்கு வருபவர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர்களால் சோதனையிடப்பட்ட பின்னரேஅனுமதிக்கப்பட உள்ளனர்.
தீவுத் திடல் பகுதி ரகசிய கேமராக்களாலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுமார் 3,000 போலீசார்தவிர நூற்றுக்கணக்கான உளவுப் பிரிவினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
சென்னையின் விடுதிகளிலும் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. திடல் பகுதியில்வெடிகுண்டுகள், செல்போன்களை செயலிழக்கச் செய்யும் ஜாமர்களும் பொறுத்தப்பட்டுவருகின்றன.
பிரதமரின் பயன்பாட்டுக்கான குண்டு துளைக்காத கார்கள், ராணுவ சரக்கு விமானம் மூலம் இன்றுடெல்லியில் இருந்து சென்னை மற்றும் கோவைக்கு கொண்டு வரப்பட்டன.
திருப்பூரில் மங்கலம் சாலையில் உள்ள பழ குடோன் எதிரே உள்ள மைதானத்தில் வாஜ்பாய் பேசுவதற்காக மேடைஅமைக்கப்பட்டு வருகிறது. இந்த மைதானமும் கருப்புப் பூனைப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுவிட்டது.
திருப்பூரில் 2,200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வழியெங்கும் சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. நகரின் லாட்ஜ்களிலும் பஸ் நிலையம், ரயில் நிலையகளிலும் சோதனைகள்நடந்து வருகின்றன.
அதே போல கோவை மாவட்டத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனைகளும் நடந்துவருகின்றன.
சோனியா, அத்வானி வருகை:
வாஜ்பாயைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமிழகத்திற்கு பிரச்சாரத்துக்கு வருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதியுடன் வரும் 7ம் தேதி, அவர் சென்னையில் ஒரே மேடையில் பேசுகிறார். சுமார் 24 ஆண்டுகளுக்குப் பின்காங்கிரஸ் தலைவர் ஒருவர் திமுக மேடையில் ஏறப் போகிறார்.
அதே போல 7ம் தேதி துணைப் பிரதமர் அத்வானியும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். சிதம்பரம், ஊட்டி, பாண்டிச்சேரியில்சூறாவளி சுற்றுப் பயணம் செய்யும் அத்வானி பொதுக் கூட்டங்களில் பேசவுள்ளார்.
இவ்வாறு அடுத்த 3 நாட்களும் நாட்டின் முக்கிய வி.வி.ஐ.பிக்கள் தமிழகத்தை முற்றுகையிடுவதால் போலீசார்பாடுதான் படு திண்டாட்டமாகியுள்ளது. 24 மணி நேர கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் முடியும் வரை போலீசாரின் விடுப்புகள் ரத்தாகிவிட்டன.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications