திருவள்ளூர்: கலெக்டர் இடமாற்றலை தொடர்ந்து 4 துணை தாசில்தார்கள் சஸ்பெண்ட்
சென்னை:
தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகன் இடமாற்றம் செய்யப்பட்டதைத்தொடர்ந்து, அம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு துணை வட்டாட்சியர்களும் (தாசில்தார்கள்) தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் குளறுபடிகள், தேர்தல் பணிகளில் குழப்பம் ஆகிய புகார்களையடுத்து மாவட்டஆட்சித் தலைவர் சந்திரமோகனை மாற்றி நேற்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டது. முதல்வர் ஜெயலலிதாவின்துணைச் செயலாளராகப் பணியாற்றிய சந்திரமோகன், சசி அண்ட் கோவுக்கு நெருக்கமானவர் என கோட்டைவட்டாரத்தில் பேசப்படுகிறது.
சந்திரமோகன் மாற்றிய கையோடு அந்த மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு துணை வட்டாட்சியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்துமாநில தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி உத்தரவிட்டுள்ளார்.
சண்முகம், கோகிலா, கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜ் ஆகிய அந்த நான்கு துணை வட்டாட்சியர்களும், வாக்காளர் பட்டியலில்ஏற்பட்ட பெரும் குளறுபடிகளுக்குக் காரணம் என்று தெரிய வந்ததால் அவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகதேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதிய கலெக்டர் பதவியேற்பு:
இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக பிரபாகர் நேற்றே பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேர்தல் கமிஷனின் அதிரடியால் காலதாமதம் ஏதும் செய்யாமல் புதிய மாவட்ட ஆட்சித் தலைவரை தமிழக அரசு உடனடியாகநியமித்துவிட்டது.
கலெக்டர் பிரபாகரே மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும் செயல்படுவார் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
மேலும், திருவள்ளூர் மாவட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக சென்னையிலிருந்து 1500 அரசு ஊழியர்கள் திருவள்ளூர்அனுப்பப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications