தமிழகத்தில் தெரிந்தது சந்திர கிரகணம்
சென்னை:
தமிழகத்தின் பல இடங்களில் நேற்று நள்ளிரவு முழு சந்திர கிரகணம் தெரிந்தது.
இரவு 12.18க்கு சந்திரனின் மீது பூமியின் நிழல் படறத் தொடங்கியது. நள்ளிரவு 1.22 மணிக்கு முழு சந்திரனும் பூமியின் நிழலால்மறைந்தது. மறைக்கப்பட்ட பகுதி போக, ஓரங்களில் மட்டும் சந்திரனின் ஒளி வட்டமாய் மோதிரம் போல் வெளிப்பட்டது.
இரவு 2.38 மணிக்கு பூமியின் நிழலில் இருந்து சந்திரன் வெளியேற ஆரம்பித்தது. அதிகாலை 3.42 மணிக்கு கிரகணம் முடிந்துமுழு நிலவும் பூமியின் நிழலில் இருந்து வெளியேறியது.
இந்த சந்திர கிரகணத்தை 2 மணியளவில் தமிழகத்தில் முழுமையாகக் காண முடிந்தது. ஆனால் கடலோரப் பகுதிகளில்மேகமூட்டமாக இருந்ததால் கிரகணத்தைக் காண முடியவில்லை.
சந்திர கிரகணத்தையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்கள் நேற்று மாலையே மூடப்பட்டுவிட்டன.
இந்தியா தவிர, கிழக்காசியா, கிழக்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மத்திய ஆசியா ஆகியபகுதிகளிலும் சந்திர கிரணத்தைக் காண முடிந்தது. வட அமெரிக்காவில் கிரகணம் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications