முடிவுக்கு வந்தது அரவாணிகளின் கூவாகம் திருவிழா !
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடந்தது.
கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடந்த வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தாலிகட்டிக் கொள்ளும் கொட்டும் மழையில் நடந்தது.
ஆயிரக்கணக்கான அரவாணிகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டினார். பின்னர் அரவாணை கணவராக அடைந்தமகிழ்ச்சியில் அரவாணிகள் கும்மி அடித்து பாட்டுப் பாடி வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடந்தது. அதன் பிறகு தாலியை அறுத்து எறியும் களப்பலி நிகழ்ச்சிநடைபெற்றது. அப்போது அரவாணிகள் ஒப்பாரிப் பாடல்களைப் பாடினர்.
அத்துடன் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா நிறைவு பெற்றது. கூவாகத்தில் கடந்த ஒரு வார காலமாகக்கூடிய ஆயிரக்கணக்கான அரவாணிகள் அணி, அணியாக தங்கள் ஊர்களுக்குப் புறப்பட்டு வருகின்றனர்.
இவர்களைக் காண வந்த இளசுளும், பெரிசுகளும் ஊர்களுக்கு வண்டி ஏறுகின்றனர்.












Click it and Unblock the Notifications