ஓ.பியால் கேவலப்பட்ட மாண்புமிகு
பெரியகுளம்:
பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தினகரனை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில்பேசிய அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தினகரனை 35 தடவை மாண்புமிகு.. மாண்புமிகு என அழைத்து அந்தவார்த்தையையே கேவலப்படுத்தினார்.
பிரதமர், முதல்வர், அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோரைத் தான் மாண்புமிகு என்று அழைப்பது மரபு.
ஆனால், சசிகலாவின் அக்காள் மகன் என்ற ஒரே காரணத்துக்காக சிட்டிங் எம்.பியான தினகரனை மாண்புமிகு எனவிளித்தார் ஓ.பி.
ஒருமுறை, இரண்டு முறையல்ல... அந்தப் பொதுக் கூட்டத்தில் 35 முறை தினகரனுக்கு மாண்புமிகு போட்டி சசிகுடும்பம் மீதான தனது பயத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையே தென் மாவட்ட தேர்தல் செலவு பட்டுவாடாவை ஓ.பி. மூலமாகத் தான் அதிமுக செய்து வருகிறது.இதனால் அவரது நடவடிக்கைகள், அவரை யார், யார் சந்திக்கிறார்கள், பட்டுவாடா எப்படி நடக்கிறது என்பதைஉளவுப் பிரிவு போலீசை வைத்து கண்காணித்து வருகிறது அதிமுக தலைமை.
அமைச்சரின் அனைத்து நடவடிக்கைகளையும் உளவுப் பிரிவினர் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்துவருகின்றனர். இதனால் வேதனை அடைந்தாலும் அதை கண்டிக்க மன தைரியம் இல்லாமல், எதிர்க்கவும்திராணியில்லாமல் வழக்கமான தனது புன் சிரிபபால் மனப் புண்ணை ஆற்ற முயன்று கொண்டிருக்கிறார் ஓ.பி.












Click it and Unblock the Notifications