பெரியார் சிலை: சீலை ரகசியமாய் அகற்றிய அதிகாரி

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் தமிழக அரசால் மூடப்பட்ட பெரியார் சிலையின் சீலை திருட்டுத்தனமாத அகற்றமுயன்ற தாசில்தாரை தி.கவினர் தாக்க முயன்றனர். இதையடுத்து அவர் தப்பியோடினார்.

புதுக்கோட்டை திராவிடர் கழக அலுவலக வளாகத்தில் பெரியார் அறக்கட்டளையின் சார்பில் பெரியார் சிலைஅமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை 7ம் தேதி திறக்கப்பட இருந்தது.

இந் நிலையில் சிலைக்கு அரசிடம் அனுமதி வாங்கவில்லை என்று கூறி உதவி கலெக்டர் சந்தோஷ் மிஸ்ராதலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென சிலையை மூடி, சீல் வைத்தனர். இதையடுத்து அங்குபதற்றம் ஏற்பட்டது.

இந்த சீலை வரும் 10ம் தேதிக்குள் அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர்கருணாநிதி எச்சரித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் இது பெரிய விவகாரமாகிவிடும் என்பதால் சீலை அகற்றுமாறு அதிகாரிகளுக்குசென்னையில் இருந்து உத்தரவு பறந்தது.

சீலை யாருக்கும் தெரியாமல் அகற்றிவிடுமாறும், இதன்மூலம் சிலையை அரசு மூடவே இல்லைஎன்பதைப் போல காட்டிக் கொள்ளவும் திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து இன்று காலை தாசில்தார் சங்கரநாராணன் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் திகஅலுவலகத்துக்கு அருகே உள்ள கட்டடம் வழியாக சிலை அருகே வந்தனர். மெதுவாக, யாருக்கும்தெரிந்துவிடாதபடி சிலைக்கு வைத்த சீலை உடைத்தனர்.

இதைப் பார்த்துவிட்ட திக தொண்டர்கள் ஓடி வந்தனர். இதைக் கண்ட தாசில்தார் சங்கரநாராயணன்அங்கிருந்து தப்பி ஓடி தனக்கு பாதுகாப்பாக வந்து வெளியே நின்ற சப்-இன்ஸ்பெக்டரின்வாகனத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.

தொண்டர்களிடம் அவரது உதவியாளர் மட்டும் மாட்டிக் கொண்டார். இதையடுத்து அவரைதொண்டர்கள் தாக்க முயலவே, சப்-இன்ஸ்பெக்டர் ஓடி வந்து அவரை மீட்டுக் கொண்டு பறந்தார்.

அரசு வைத்த சீலை நாங்கள் உடைத்தாக பொய் வழக்குப் போடவே இந்த முயற்சி நடந்ததாக சிலதிகவினர் கூறுகின்றனர்.

ஆனால்,தேர்தல் நெருங்கும்போது பெரியார் சிலைக்கு சீல் வைத்த விஷயம் பிரச்சனையாகலாம்என்பதால் தான் அதை திருட்டுத்தனமாக அகற்றிவிட்டு ஒன்றும் தெரியாதது போல நடிக்க அரசுமுயல்வதாக திக நிர்வாகிகள் கூறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+