4ம் கட்ட வாக்குப் பதிவில் மூன்று பேர் கொலை
டெல்லி:
மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது. தேர்தலில் 55சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மூவிலும் பிகாரிலும் நடந்த வன்முறைகளில் 3 பேர்பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் 30 தொகுதிகள், ராஜஸ்தானில் 25, மத்தியப் பிரதேசத்தில் 12, பிகாரில் 12,ஜம்மூ, நாகலாந்தில் தலா ஒரு தொகுதி, அருணாச்சல் பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கு இன்று தேர்தல்நடக்கிறது.
இதில் பிரதமர் வாஜ்பாய் போட்டியிடும் லக்னெள (உத்தரப் பிரதேசம்) தொகுதியும் அடக்கம். இங்குவாக்களிப்பதற்காக காலையில் சிறப்பு விமானத்தில் வாஜ்பாய் லக்னெள வந்தார். வாக்களித்துவிட்டுதேர்தல் பிரச்சாரத்துக்காக சிறப்பு விமானத்தில் அவர் கோவைக்குக் கிளம்பினார்.
மொத்தம் 83 தொகுதிகளுக்கு நடக்கும் தேர்தலில் 10.72 கோடி பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றவர்கள். இந்தத் தொகுதிகளில் மொத்தம் 921 பேர் களத்தில் உள்ளனர்.
மொத்தம் 1.08 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 45 சதவீத சாவடிகள்பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டு 90,000 பாரா மிலிட்டரிப் படைகள்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஜம்மூ-காஷ்மீரில் அனந்த்நாக் தொகுதியில் முதல்வர் முப்தி முகம்மத் சயீத் வாக்களித்துவிட்டுத்திரும்பிய சிறிது நேரத்தில் வாக்குச் சாவடியின் மீது தீவிரவாதிகள் கிரனைட் குண்டுகளை வீசித்தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் காயமடைந்தனர்.
பிகாரில் வாக்குப் பதிவின்போது பெரும் வன்முறை வெடித்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும்நடந்த குண்டுவெடிப்பு, அடிதடி, துப்பாக்கிச் சூடி, போலீஸ் தடியடியில் 20 பேர்காயமடைந்துள்ளனர். லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவரும், ஐக்கியஜனதா தளத் தொண்டர் ஒருவரும் தேர்தல் வன்முறைகளில் பலியாயினர்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானிலும் சிறிய அளவில் வன்முறைகள் நடந்துள்ளன. இதில் 7காங்கிரஸ், பா.ஜ.க. தொண்டர்கள் காயமடைந்தனர்.
கடந்த மாதம் 20, 22, 25ம் தேதிகளில் நடந்த மூன்று கட்டத் தேர்தல்களில் மொத்தமுள்ள 543தொகுதிகளில் 278 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. இன்று நடந்த நான்காம் கட்டத்வாக்குப் பதிவுடன் 83 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்துவிட்டது.
இதையடுத்து வரும் மே 10ம் தேதி இறுதிக் கட்டமாக தமிழகம், கேரளம் உள்ளிட்ட 16 மாநிலங்களில்உள்ள 183 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications