ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் பாதுகாப்பு: தேர்தல் ஆணையத்திடம் தமிழகம் உறுதிமொழி
சென்னை:
ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசுஉறுதிமொழி அளித்துள்ளது.
பா.ம.கவுக்கு எதிரான நிலையை எடுத்துள்ள ரஜினி, தனது ரசிகர்களுக்கு பாதுகாப்பு கோரி தேர்தல்ஆணையத்திடம் நேரில் புகார் கொடுத்தார். இந்த புகார் மனுவை தமிழக அரசுக்கு பார்வர்ட் செய்த தேர்தல்ஆணையம், ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரனேஷ், தேர்தல் ஆணையத்துக்கு பதில்அனுப்பியுள்ளார். அதில், ரஜினிக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் சேர்த்து பாதுகாப்பு தரப்படும் என அரசின்சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஜினி ரசிகர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ள லட்சுமிபிரனேஷ், தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications