தேர்தல் ஆணையத்தின் நோட்டீசை எதிர்த்து புதுவை அதிமுக உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
புதுமுக அதிமுகவின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம்அனுப்பிய நோட்டீசை எதிர்த்து அக் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடந்த மாதம் 7ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் புதுவை பிரசாரத்துக்காக முன்னேற்பாடுகளை செய்ய அனுமதிகேட்டு புதுவை அதிமுக சார்பில் 2.4.2004 அன்று பொதுப்பணித் துறையிடம் அனுமதி கேட்டோம்.
அனுமதி பெற்றபிறகு கனகசெட்டிகுளத்தில் இருந்து கன்னிகோவில் வரை அதிமுக பேனர்கள், கொடிகள்ஆகியவற்றைக் கட்டினோம். இந் நிலையில், 16.4.2004 அன்று வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதாகதேர்தல் அதிகாரி (மாவட்ட ஆட்சியர்) புதுவை அதிமுகவுக்குக்க கடிதம் எழுதினார்.
தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ஹதாகவும், எனவே புதுவை அதிமுக மீது நடவடிக்கை எடுக்குமாறு இணைதலைமை தேர்தல் அதிகாரிக்கு ஏன் பரிந்துரை செய்யக்கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து பாண்டிச்சேரியில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களில் அதிமுக மீது சுவர் சேத தடுப்புசட்டத்தின் கீழ் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந் நிலையில் தேர்தல் அதிகாரியின் பரிந்துரை அடிப்படையில் இணை தலைமை தேர்தல் அதிகாரி, புதுவைஅதிமுகவின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
எந்த விதிமுறையை மீறினோம் என்பது நோட்டீசில் விளக்கமாகக் கூறப்பட வில்லை.
உள்நோக்கத்துடன் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் அதிமுகவுக்கு எதிராக பரிந்துரைத்துள்ளார்.
காரணம் அவர் புதுவை முன்னாள் திமுக முதல்வர் ஜானகிராமனின் உறவினர். எனவே, இந்த விளக்க நோட்டீசைரத்து செய்ய வேண்டும். இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை விளக்க நோட்டீசுக்கு இடைக்காலதடைவிதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பாலசுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது அதிமுக சார்பில் வழக்கறிஞர்ஜோதியும், தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் ராஜகோபாலும் ஆஜராகி வாதாடினார்கள்.
அப்போது அதிமுக சார்பில் விளக்க நோட்டீசுக்கு பதில் அளிக்கக் கூடுதல் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையம்தயாராக இருப்பதாக ராஜகோபால் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம்15ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும்,
தேர்தல் ஆணையம் அனுப்பிய விளக்க நோட்டீசுக்கு புதுவை அதிமுக அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் பதில்அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு அடுத்த மாதம் 15ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications