அழகரை அழகாக பயன்படுத்திய வேட்பாளர்கள்!
மதுரை:
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல வேட்பாளர்களும்பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் நடந்து முடிந்த சித்திரைத் திருவிழாவை அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சைவேட்பாளர்களும் மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின்போது அழகர் மதுரை நகருக்கு வரும் வழியெங்கும் உள்ளபகுதிகளில் வேட்பாளர்கள் திடீர் விசிட் அடித்து கூடியிருந்த பக்தர்களிடம் வாக்கு சேகரித்தனர்.
வாக்காளர்களைத் தேடிப் போகும் அவஸ்தை ஏதும் இல்லாமல், கூடியிருக்கும் பக்தர்களிடம் வாக்கு சேகரித்ததுவேட்பாளர்களுக்கு எளிதாக இருந்தது. பக்தர்களுக்கு விசிறிகள் போன்றவற்றைக் கொடுத்து உபசரித்தும் சிலவேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர். பதிலுக்கு பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா (அழகரை வாழ்த்தும் கோஷம்!)என்றபோது அரண்டு போயினர் வேட்பாளர்கள்.












Click it and Unblock the Notifications