வாஜ்பாயின் வாரிசு யார் என்பதை கேட்க காங்கிரசுகுக்கு உரிமை இல்லை: பா.ஜ.க.
சென்னை :
காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் யார் என்பதை அறிவிக்க முடியாமல் திணறும் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர்வாஜ்பாயின் அடுத்த வாரிசு யார் என்பதைக் கேட்க உரிமை இல்லை என்று தமிழக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியில் வாரிசுரிமை அடிப்படையில்தான்பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
வாஜ்பாயின் வாரிசு யார் என்பதை அறிவிக்கக் கோருகிறது காங்கிரஸ். முதலில் அவர்களது கூட்டணியின் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் அறிவிக்கட்டும். கேட்டால், தேர்தலுக்குப் பிறகு அறிவிப்பதாகக்கூறுகிறார்கள்.
தேர்தலுக்குப் பிறகும் கூட அவர்களால் பிரதமர் யார் என்பதை அறிவிக்க முடியாது. ஏனென்றால் சரத்பவாருக்கும்பிரதமராக ஆசை, முலாயம் சிங்குக்கும் ஆசை, சோனியாவுக்கும் ஆசை. இன்னும் உள்ள சிறு கட்சிகளின்தலைவர்களுக்கும் பிரதமராக ஆசை உள்ளது.
ஆனால் பா.ஜ.கவில் ஒரே தலைவர், ஒரே பிரதமர் வாஜ்பாய் அவர்கள் மட்டுமே. எனவே மக்கள் தெளிவானபலத்தை தேசிய ஜனநாயக கூட்டணிக்குக் கொடுக்க வேண்டும்.
பிரதமர் வாஜ்பாயை ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து நதி நீர் இணைப்பு குறித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளதுஅவரது சமூக பொறுப்புணர்வை காட்டுகிறது என்றார் தமிழிசை.












Click it and Unblock the Notifications