எஸ்.ஐ. மீது தாக்குதல்: 6 சி.ஆர்.பி.எப். படையினர் கைது
விழுப்புரம்:
விழுப்புரத்தில் அரவாணிகளை கிண்டல் செய்ததைத் தட்டிக் கேட்ட காவல்துறை உதவி ஆய்வாளரை தாக்கியமத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் நேருஜி நகரில் உள்ள கோவிலில் திருவிழா நடந்தது. இதையொட்டி அங்கு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இரு நிகழ்ச்சிகளையொட்டியும் உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் போலீஸார்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தேர்தல் பணிக்காக வந்திருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த சிலர் அங்கு வந்தஅரவாணிகளைப் பார்த்து கிண்டல் செய்தனர். இதை சிவக்குமார் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்தசி.ஆர்.பி.எப். படையினர் சிவக்குமாரைத் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து வந்தனர். தாக்குதல் நடத்திய சி.ஆர்.பி.எப் படையினர் 6 பேரை கைதுசெய்தனர். அவர்களிடம் விழுப்புரம் டி.எஸ்.பி விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications