சென்னை: துணி நிறுவனத்தில் தீவிபத்து; ரூ.18 கோடி சேதம்
சென்னை:
சென்னை தாம்பரம் ஏற்றுமதி வளாகத்தில் உள்ள ஒரு தனியார் துணி நிறுவனத்தில் தீவிபத்து ஏற்பட்டதில் ரூ.18கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
சென்னை புறநகர்ப் பகுதியான தாம்பரம் சானிடோரியத்தில் சென்னை ஏற்றுமதி வளாகம் (மெப்ஸ்) உள்ளது.இங்கு ஏராளமான தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் விஜய் கார்மெண்ட்ஸ் என்ற தனியார் நிறுவனமும்ஒன்று.
இந் நிறுவனம் துணிகளை தைத்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. 1,00க்கும் மேற்பட்ட ஊழியர்கள்இங்கு பணிபுரிகின்றனர்.
இந் நிலையில் இந் நிறுவனத்தில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிட்டங்கியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.உடனடியாக தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட் டது.
ஆனால் கிட்டங்கியில் இருந்து தீ நிறுவனம் முழுவதும் பரவியதால் தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை.சுமார் 12 மணி நேரம் போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த தீவிபத்தில் தைத்து முடிக்கப்பட்ட துணிகள், தைப்பதற்கு வந்திருந்த துணிகள், தையல் மிஷின்கள்,கம்ப்யூட்டர்கள் உள்பட சுமார் 18 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின. கொழுந்து விட்டு எரிந்த தீகாரணமாக நிறுவனத்தில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.
தீவிபத்து குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்கசிவுகாரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications