காவிரியை கண்டுகொள்ளாத வாஜ்பாய், ஜெயலலிதா
சென்னை:
சென்னையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் வாஜ்பாயும், முதல்வர் ஜெயலலிதாவும் காவிரிப்பிரச்சினை தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக, வாஜ்பாய் நதிகள் இணைப்பு குறித்து விரிவாகப்பேசினார்.
வாஜ்பாய் நேற்று தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிற்பகலில் கோவை வந்த அவர்அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் சென்றார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் கோவை, நீலகிரி பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.
திருப்பூரில் பேசிய வாஜ்பாய், நிலையான ஆட்சி அமைய பா.ஜ.கவுக்கு ஓட்டுப் போடுங்கள், தனிப்பெரும்பான்மை கிடைக்கும் வகையில் பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.
மேலும் காங்கிரஸ் கட்சி பதவிக்காகவே உயிருடன் உள்ளதாகவும் அவர் விமர்சித்தார். நேரு, காமராஜர்காலத்துடன் காங்கிரஸ் போய் விட்டது. அதன் பிறகு வந்தவர்கள் அனைவரும் பதவிக்காகவே இருந்து வருவதாகஅவர் குறிப்பிட்டார்.
திருப்பூர் கூட்டத்திலும் சரி, சென்னை கூட்டத்திலும் சரி வாஜ்பாய் ஒரு முக்கியப் பிரச்சினை குறித்து வாயேதிறக்கவில்லை. அதுதான் காவிரிப் பிரச்சினை. காவிரி என்று மறந்தும் கூட அவர் ஒரு வார்த்தை கூடசொல்லவில்லை. அதற்கு மாறாக நதிகளை இணைத்தால் இந்தியா வளம் பெறும் என்பதை அவர் விரிவாகப்பேசினார்.
இணைவோம், நதிகளை இணைப்போம் என்று தமிழில் கூறியபடி தனது நதி நீர் இணைப்பு குறித்த பேச்சைதொடங்கினார் வாஜ்பாய். நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து 60ம் ஆண்டுகளிலேயே பேசத் தொடங்கினாலும்,அதன் பிறகு வந்த காங்கிரஸ் அரசுகள் இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தனது அரசு நதிகளைஇணைப்பதை நனவாக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேபோல ஜெயலலிதாவும் காவிரிப் பிரச்சினை குறித்து எந்தவித வேண்டுகோளையும் பிரதமரிடம்வைக்கவில்லை.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications