நதிகள் இணைப்பு- வெறும் தேர்தல் ஸ்டண்ட்: ராமதாஸ்
சென்னை:
நதிகள் இணைப்புத் திட்டம் பற்றி பிரதமர் வாஜ்பாய் பேசியிருப்பது வெறும் தேர்தல் ஸ்டண்ட் என்று பா.ம.க.தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் வாஜ்பாய் தமிழகத்தின் உயிர் நாடிப் பிரச்சினையான காவிரி நதிநீர்ப் பிரச்சினை குறித்து எதுவும்பேசாமல் தமிழக மக்களை ஏமாற்றி விட்டுச் சென்றிருக்கிறார்.
ஆனால் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் நதிகள் இணைப்பு திட்டத்தைத் தொடங்குவோம் என்று அறிவித்திருக்கிறார்.இது வெறும் தேர்தல் ஸ்டண்ட் ஆகும். ஏனெனில் நதிகள் இணைப்புத் திட்டத்தில் எந்தவித முன்னேற்றமும்ஏற்படதாது குறித்து கடந்த வாரத்தில்தான் உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கண்டித்தது.
நதிகள் இணைப்பு என்பது கங்கையையும், காவேரியையும் மட்டும் இணைப்பது அல்ல. இதில் மொத்தம் 31உள்இணைப்பு திட்டங்கள் அடங்கியுள்ளன. இவற்றில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே உடன்பாடுஏற்பட வேண்டும்.
இதுவரையில் 8 இணைப்பு திட்டங்களுக்குத்தான் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் ஒன்றுக்குகூட சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
நதிகள் இணைப்பு என்பது நீண்ட காலத்திட்டம். ஆனால் அதுவரையில் காவிரி பிரச்சினை காத்திருக்க வைத்தால்தமிழகம் பாலைவனமாகி விடும். நதிகள் இணைப்பு என்பது ஏதோ தங்களது கற்பனையில் உதித்த திட்டம்என்பதுபோல இப்போது சிலர் புதிதாக பேசிக்கொண்டு வருகிறார்கள்.
கர்நாடகத்தின் மீதுள்ள பற்றுதலால் நதிகள் இணைப்புத் திட்டம் என்று பேசி காவிரி பிரச்சினையை திசை திருப்பிவிட முயற்சித்துக் கொண்டி ருக்கிறார்கள். இது தமிழகத்துக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.இத்தகையோரை தமிழக மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications