வீடு தேடி வந்து ரஜினி என்னை சந்தித்தார்: சு.சுவாமி
காஞ்சிபுரம்:
நடிகர் ரஜினிகாந்த் தன்னை வீடு தேடி வந்து சந்தித்ததாகவும், அவரிடம் ஆதரவு தரக் கோரி ஏதும் கேட்கவில்லைஎன்றும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மக்களவைத் தொகுதியின் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் குமரேசனை ஆதரித்து சுப்பிரமணிய சுவாமிசெங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், வாலாஜாபாத், காஞ்சீபுரம், தேரடி, சங்கர மடம் ஆகிய இடங்களில்பிரசாரம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வளைகுடா நாடுகளில் எல்லாம் கடல் நீரை குடிநீராக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழகஅரசியல்வாதிகள் அதில் ஆர்வம் காட்டவில்லை.
மத்திய அமைச்சரவையில் இருந்த போது நெசவாளர் மீது விதிக்கப்பட்ட சென்வாட் வரிக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பாத திமுக கூட்டணியினர், தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த வரியை ரத்து செய்வோம்என்று கூறி நெசவாளர்களை ஏமாற்றி வருகின்றனர்.
ரஜினி ரசிகர்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் ரஜினி எனக்கு நல்ல நண்பர். தேசப்பற்று உடையவர்.நதிகள் இணைப்புக்காக குரல் கொடுத்திருப்பவர். அவர் எனது வீட்டுக்கு வந்து என்னை சந்தித்து பேசினார்.அவரிடம் ஆதரவு தரக்கோரி நான் ஏதும் கேட்கவில்லை.
செங்கல்பட்டு பா.ம.க. வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி ரெயில்வே துறையில் பல சாதனைகள் புரிந்ததாக கூறுகிறார்.உண்மையில் மத்திய ரெயில்வே அமைச்சர் நிதிஷ்குமார் தனக்கு நேரம் இல்லாததால் தமிழ்நாட்டில் நடக்கும்ரெயில்வே திட்ட விழாக்களுக்கு ஏ.கே.மூர்த்தியை அனுப்பினார். அவ்வளவுதான்.
ஜனதா-- புதிய நீதிக்கட்சி கூட்டணி இந்த தேர்தல் மட்டுமல்லாமல் அடுத்து வரும் சட்ட சபை தேர்தலுக்கும்தொடரும். சட்டசபை தேர்தலின்போது எங்கள் அணியில் பல புதிய கட்சிகளும் இடம் பெறும் என்று கூறினார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications