எறும்புகளிடம் பாடம் கற்றேன்: வைகோ
மதுரை:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, சிறை அறைக்குள் ஊர்வலம் சென்ற எறும்புக் கூட்டத்தைப் பார்த்துநான் சுறுசுறுப்பையும், விடா முயற்சியையும், தைரியத்தையும் கற்றுக் கொண்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் வைகோ பேசினார். அதேதிருமங்கலத்தில், அதே இடத்தில் அமைக்கப்பட்ட மேடையில் நடந்த பொதுக் கூட்டத்தில் முன்பு விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதால்தான் அவர் வேலூர் சிறைக்கு பொடா கைதியாக செல்ல நேர்ந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
வைகோ பேசுகையில், நான் வேலூர் சிறையில் 19 மாதங்கள அடைபட்டிருந்தபோது எனக்கு தைரியம் தந்தவைஎறும்புகள்தான். எனது அறைக்குள் அவ்வப்போது எறும்புகள் வந்து செல்லும். அவற்றைப் பார்த்து, அவற்றின்சுறுசுறுப்பைப் பார்த்து நான் கற்றுக் கொண்டேன்.
அதேபோல எனக்குக் கொடுக்கப்படும் சப்பாத்தியிலும் சில எறும்புகள் இருக்கும். அந்த சப்பாத்திகளை துளைத்துக்கொண்டு அவை செல்லும். சப்பாத்தியை எடுத்து எங்கு வைத்தாலும் எறும்புகள் விடாமல் அதை துரத்திக்கொண்டே இருக்கும்.
இதேபோல, ஒருமுறை கோர்ட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் சிறைக்குத் திரும்பியபோது தொண்டர்கள் கொடுத்தவெள்ளரிக்காயை அறைக்குள் வைத்தேன். அவற்றையும் எறும்புகள் விடவில்லை. அறைக்குள் வைக்கப்பட்டிருந்ததுடைப்பத்தின் மீதேறி வெள்ளக்காயை அடைந்தன.
இதிலிருந்து எனக்குத் தெரிந்தது ஒன்று தான், லட்சியத்தை அடைவதென்றால் கடுமையாக உழைக்க வேண்டும்,விடாமல் முயற்சிக்க வேண்டும், அப்படிச் செய்தால் நிச்சயம் வெற்றிதான் என்பதை எறும்புகள் வாயிலாக உணர்ந்துகொண்டேன் என்றார் வைகோ.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications