நள்ளிரவில் கிடைத்த தீவுத் திடல்.. அவசரமாய் நடக்கும் பணிகள்
சென்னை:
சென்னையில் கருணாநிதியும், சோனியா காந்தியும் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள தீவுத்திடல் மைதானம், நேற்று நள்ளிரவில் தான் காங்கிரஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அவசர கதியில்பொதுக்கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சோனியா காந்தி இன்று மாலை சென்னை வருகிறார். நேராக அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர்கருணாநிதியை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் இரவு 7 மணிக்கு தீவுத் திடலில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கருணாநிதியுடன் கலந்துகொள்கிறார்.
இந்தத் தீவுத் திடலில் நேற்று முன் தினம் (5ம் தேதி) பிரதமர் வாஜ்பாய், ஜெயலலிதா ஆகியோர் கலந்து கொண்டபொதுக் கூட்டம் நடந்தது. இதனால் 6ம் தேதி நடைபெறுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த சோனியா காந்தியின்பொதுக் கூட்டம் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இருப்பினும் திடலை காங்கிரசார் வசம் ஒப்படைக்க வேண்டாம் என போயஸ் தோட்டத்தில் இருந்துஅதிகாரிகளுக்கு உத்தரவு வந்தது. இதையடுத்து திடலை தராமல் இழுத்தடித்தனர். மேலும், வாஜ்பாய்-ஜெயலலிதாகலந்து கொண்ட அதே மேடையையும், சேர்களையும், மைக் செட்டுகளையும் அப்படியே காங்கிரசார்பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருந்தனர்.
ஆனால், மேடை அமைத்த காண்ட்ராக்டர் மற்றும் மைக்செட், சேர்களை வழங்கியவர்களை அழைத்து அமைச்சர்பொன்னையன் மிரட்டியதாகத் தெரிகிறது.
இதனால் மேடையை அவர்கள் கலைத்துவிட்டனர். மேலும் திடலுக்குக் கொண்டு வந்த ஆயிரக்கணக்கானசேர்களையும் திரும்ப எடுத்துச் சென்றனர். மாபெரும் பந்தலையும் காலி செய்துவிட்டனர்.
நூற்றுக்கணக்கான லைட்டுகள், மைக் செட்டுகளும் கழற்றி எடுத்துச் செல்லப்பட்டன. இந்தப் பணிகளை மெதுவாகசெய்யும்படி போயஸ் கார்டன் கூறியதால் நேற்று நள்ளிரவு வரை இந்தப் பணிகள் வேண்டுமென்றே இழுத்தடித்துசெய்யப்பட்டன.
கடைசியாக ஒரு ஆணி கூட இல்லாமல் முழு அளவில் தீவுத் திடலை காலி செய்து கொண்டு காண்ட்ராக்டர்கள்நகர்ந்தபோது நள்ளிரவுக்கு மேலாகிவிட்டது.
மேடை அமைக்கும் மரங்கள், சட்டங்கள், மைக் செட்டுகள், லைட்டிங், பந்தல் பொருட்கள், ஜெனரேட்டர்கள்,சேர்கள், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஆகியவற்றுடன் காங்கிரசார் கொண்டு வந்த ஐம்பதுக்கும் மேற்பட்டலாரிகள் தீவுத் திடலுக்கு வெளியே நேற்று மாலையில் இருந்தே தேவுடு காத்துக் கொண்டிருந்தன.
நள்ளிரவுக்கு மேல் காங்கிரஸார் வசம் தீவுத் திடலை அரசு அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதனால் அவசர கதியில்ஏற்பாடுகளை காங்கிரஸார் தொடங்கி வேலைகளைச் செய்து வருகின்றனர். தற்போது போர்க்கால அடிப்படையில்மேடை அமைக்கும் பணி, பந்தல் போடும் பணி ஆகியவை நடக்கிறது.
இந்தப் பணிகளை விடிய, விடிய அங்கேயே நின்று பார்வையிட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன். காலையில்மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுடன் அங்கு வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர்ஸ்டாலின், வாசனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கமாண்டோ படை கோபம்:
இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் சோனியா காந்தி பங்கேற்கும் கூட்டம் நடக்கும் திடலை கடைசிநேரத்தில் காலி செய்து, அரக்க பரக்க புதிய மேடை அமைக்கப்பட்டு வருவதை அவரது பாதுகாப்புஅதிகாரிகள் எரிச்சலுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
மேடை, பந்தல் பணிகளுக்கு இடையிலேயே பாதுகாப்புப் பணிகளை வெடிகுண்டு நிபுணர்களுடன்சேர்ந்து கமாண்டே படை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
-
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு












Click it and Unblock the Notifications