தமிழகத்தில் நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்
சென்னை:
தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் உள்ள 183 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்டவாக்குப் பதிவு வரும் 10ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம்நாளை மாலையுடன் முடிவடைகிறது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுவை தொகுதிக்கு, ஒரே நாளில் (10ம் தேதி) வாக்குப் பதிவுநடைபெறவுள்ளது.
இங்கு 39 தொகுதிகளிலும் மொத்தம் 571 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 23 பேர் பெண்கள்.அதிகபட்சமாக தென் சென்னையில் 35 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூர், பொள்ளாச்சி தனி தொகுதிகளில்தலா 7 பேரும் களத்தில் உள்ளனர்.
மாநிலத்தில் மொத்தம் 4.72 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாவர். இதில் 2.39 கோடி பேர் பெண்கள்.பாண்டிச்சேரியில் 6.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். பாண்டிச்சேரியில் 21 பேர் களத்தில் உள்ளனர்.
தமிழகத்திலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி வட சென்னை தான். இங்கு 20 லட்சம் வாக்காளர்கள்உள்ளனர். சிறிய தொகுதி பெரம்பலூர் (தனி). இங்கு 9.99 வாக்காளர்கள் உள்ளனர்.
நாளையுடன் ஒய்கிறது பிரச்சாரம்
நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதையொட்டி தமிழகத்தில் பிரசாரம் உச்ச கட்டத்தைஎட்டியுள்ளது. முக்கியத் தலைவர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று பிரதமர் வாஜ்பாய்-முதல்வர் ஜெயலலிதாவின் கூட்டு பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இன்று காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி- திமுக தலைவர் கருணாநிதியின் பொதுக் கூட்டம் தீவுத் திடலில் நடக்கிறது.
அதே போல துணைப் பிரதமர் அத்வானியும் தமிழகத்தில் இன்று பிரச்சாரம் செய்கிறார்.
பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், தூத்துக்குடி, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டணிவேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்து வருகிறார்.
இயந்திரங்கள் அனுப்பும் பணி:
இந் நிலையில் தமிழகத்தில் வாக்குப் பதிவுக்குத் தேவைப்படும் மின்னணு இயந்திரங்களை அனுப்பும் பணி இன்று தொடங்கியது.
இதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணிஇன்று காலை தொடங்கியது.
சென்னையில் உதவி தேர்தல் அதிகாரி ராமகிருஷ்ணன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சென்னையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கப்பட்டன. பின்னர் அவர்களதுசந்தேகங்கள் தீர்க்கப்பட்டு அதன் பின்னர் சீல் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளுக்குஇவை அனுப்பி வைக்கப்பட்டன.
இதுதவிர அடையாள மை உள்ளிட்ட பொருட்களும் இன்றே அனுப்பி வைக்கப்படுகின்றன.
இவை அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாப்பாக வைக்கப்படும். 9ம் தேதி காலை இவை அனைத்தும் வாக்குச்சாவடிகளில் வைக்கப்படும் என்றார்.
அதே போல தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து வாக்குப் பதிவு எந்திரங்கள்பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. வாக்குச் சாவடிகளின் அருகே உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களில் போலீஸ்பாதுகாப்புடன் இவை வைக்கப்பட்டிருக்கும்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications