காவிரி பிரச்சனையை அமுக்க முயலும் கர்நாடக ஆதரவாளர்கள்: ராமதாஸ்
பாண்டிச்சேரி:
புதுவை மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும் என்று பாமக தேர்தல்அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார்.
அதில், புதுவை மாநிலத்திற்கு தனி மாநில அந்தஸ்து, சிறப்பு அந்தஸ்து, கூடுதல் அதிகாரம் ஆகியவை கிடைக்கபாமக பாடுபடும். மாநிலத்தில் கல்வி வளர்ச்சி, சுற்றுலா மேம்பாட்டுக்கும் பாடுபடுவோம் என்று கூறப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், நதிகளை இணைக்க மத்திய அரசு இதுவரை எடுத்துள்ளநடவடிக்கைகளின் வேகத்தைப் பார்த்தால், இத் திட்டம் 2050ல் கூட முடிவடையாது என்பது உறுதி. அதுவரைதமிழக விவசாயி எலிக்கறியை தின்று கொண்டிருக்க வேண்டியது தானா? இதனால் காவிரிப் பிரச்சனையை யாரும்ஒதுக்கிவிட முடியாது.
நதிகள் இணைப்பு குறித்து ஜெயலலிதாவும் வாஜ்பாயும் ஒரே மேடையில் பேசியுள்ளார்கள். ஆனால், காவிரிகுறித்து இருவரும் வாய் திறக்கவில்லை. இது தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.
நதி நீர் இணைப்பு என்ற பெயரில், காவிரிப் பிரச்சனையை பின்னுக்கு தள்ளி விட்டனர். கர்நாடக மாநிலத்திற்குஆதரவாக நடந்து கொள்ளும் சிலர் (ரஜினி), காவிரிப் பிரச்சினையை தள்ளி விட்டு தமிழகத்தை சுடுகாடாக்கமுயன்று வருகின்றனர். இந்தச் சதியில் ஈடுபட்டுள்ள சக்தியை மக்களுக்கு பா.ம.க. அடையாளம் காட்டும்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை. அதிமுகவே திருப்தியாக இல்லை.ஜெயலலிதா தோற்க வேண்டும் என அதிமுகவினரே நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கும் ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் கடைசி நிலையை நோக்கிப்போய்க் கொண்டிருக்கிறது. நாட்டிலேயே கடை நிலை முதல்வர் ஜெயலலிதா தான்.
பா.ஜ.கவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால் தான் அவர்களைப் பிடிப்போம், இவர்களைப்பிடிப்போம், ஆட்சி அமைப்போம் என்று பேச ஆரம்பித்துள்ளார்கள்.
பல மதங்கள், கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவை மதசார்பற்றவர் ஆள வேண்டுமா அல்லது இந்தியாவை இந்துநாடு என அறிவித்து ரத்தக் களறி ஏற்படுத்த முனையும் கும்பல் ஆள வேண்டும் என்பது தான் கேள்வி.
இந்தியாவுக்கே ஒரே கலாச்சாரம் தான், அது இந்து கலாச்சாரம் தான் என்று பாசிஸ வெறி பிடித்துப் பேசிக்கொண்டிருக்கும் கும்பல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க விட மாட்டோம். அவர்களுக்கு இனி எக் காரணம் கொண்டுதுணை போக மாட்டோம் என்றார் ராமதாஸ்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications