மருத்துவம், பி.இ. சீட்களை அதிகரிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான இடங்களை அதிகரிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்றுஉத்தரவிட்டது.

நீதிபதி லகோடி, நீதிபதி மாத்தூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தரப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக, தகுதியுள்ள பிற மாணவர்களுக்குமருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போவதாகவும், அதைத் தடுக்க, இந்தப்படிப்புகளுக்கான இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

வாய்ஸ் என்ற நுகர்வோர் நல அமைப்பு தாக்கல் செய்திருந்த மனு விசாரித்த நீதிபதிகள் இந்தத் தீர்ப்பைவழங்கினர்.

69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து, இந்த அமைப்பு தாக்கல் செய்திருந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில்உள்ளது.

இந் நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று வழக்கிய இன்னொரு தீர்ப்பில், கல்லூரிகளில் ஆல் இந்தியா கோட்டாவுக்கு25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த 25 சதவீத இடங்கள் தேசிய அளவிலானநுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும்.

மீதியுள்ள 75 சதவீத இடங்களை மட்டுமே மாநில அரசும், தனியார் கல்லூரி நிர்வாகங்களும் நிரப்ப முடியும்.

மே 17ல் நுழைவு தேர்வு முடிவு:

இந் நிலையில் தமிழகத்தில் வரும் 17ம் தேதி மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுமுடிவுகள் வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பாலகுருசாமி கூறியுள்ளார்.

சேலத்தில் இன்று நிருபர்களை சந்தித்த அவர்,

17ம் தேதி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 20-ம் தேதிக்குள் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும்.ஜூன் 30ம் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்கும்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்பட 10 இடங்களில் அண்ணா பல்கலைக் கழகமே இறுதியாண்டுபொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு மையங்களை தொடங்கவுள்ளது.

அனைத்து கல்லூரி மாணவர்களின் ரேங்க் அடிப்படையில் அவர்களின் பட்டியல் வேலைவாய்ப்பு அளிக்கும்நிறுவனங்களுக்குத் தரப்படும். அந்த நிறுவனத்தினர் நேரடியாக, இந்த 10 மையங்களுக்கும் சென்றுமாணவர்களைச் நேர்காணல் செய்து வேலைக்கு தேர்வு செய்வார்கள். 2004--2005 கல்வி ஆண்டு முதல் இந்ததிட்டம் நடைமுறைக்கு வரும்.

பொறியியல் கல்லூரிகளுக்கான பாடத்திட்டங்கள் முழுவதுமாக மாற்றப்பட்டு, இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்புதிய பாடங்கள் நடைமுறைக்கு வரும்.

தமிழ்நாட்டில் 40 பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சிக் கல்லூரிகளாக மாற தகுதி உள்ளதாக கண்டறியப்பட்டுஉள்ளன.

கடந்த ஆண்டு 900 மாணவர்கள் போலி சாதிச் சான்றிதழ்களைத் திருத்தி கல்லூரியில் சேர்ந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மேற்கொண்டு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+