சோனியா கூட்டத்தில் வைகோ-ராமதாஸ் மிஸ்ஸிங்
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர்வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவில்லை.
ராமதாசின் மகன் அன்புமணி, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் மேடைக்கு அருகே மலர்க்கொத்து கொடுத்து சோனியாவை வரவேற்றார். அதே போல மதிமுக சார்பில் சபாபதி மோகன்சோனியாவை வரவேற்றார். அத்தோடு சரி, மேடையில் இந்த இரு கட்சிகளின் சார்பிலும் யாரும்மேடையேறவில்லை.
ராஜிவ் கொலையை விசாரித்த, ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையை வைத்து திமுகவுக்கும்விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக உள்துறை அமைச்சர் அத்வானியிடம் சிலஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கொடுத்த மனுவை பா.ஜ.க. இப்போது பெரிதாக்கி வருகிறது.
ஜெயினின் இறுதி அறிக்கையில் திமுகவுக்கும் ராஜிவ் கொலைக்கும் தாடர்பில்லை என்றுகூறப்பட்டுவிட்டாலும், திமுக மீது காங்கிரஸ் கொடுத்த புகார் மனுவை முழுப் பக்க விளம்பரமாகதமிழகத்தின் முக்கிய பத்திரிக்கைகள் அனைத்திலும் பா.ஜ.க. கொடுத்துள்ளது.
தன் கணவரைக் கொலை செய்தவர்களின் ஆதரவாளர்களுடன் சோனியா கைகோர்த்தது நியாயாமா?என்றும் அந்த விளம்பரங்களில் கேள்வி எழுப்பி வருகின்றன பா.ஜ.கவும் அதிமுகவும்.
இந் நிலையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான வைகோவும், ராமதாசும் சோனியாவுடன்கூட்டத்தில் பங்கேற்றால், அந்த ஒரு போட்டோவை வைத்தே எதிர்மறை பிரச்சாரத்தில்பா.ஜ.க-அதிமுக கூட்டணி ஈடுபடக் கூடும் என்பதால், அதைத் தவிர்க்க முடிவு செய்யப்பட்டது.
சோனியா-கருணாநிதி- வைகோ மற்றும் ராமதாஸ் ஆகியோர் தொலைபேசியில் கலந்து பேசியேஇந்த முடிவை எடுத்தனர்.
அதன்படி, சோனியாவுடன் கூட்டத்தில் கருணாநிதி மட்டுமே பங்கேற்பது என்றும் அந்த நேரத்தில்வைகோவும் ராமதாசும் வெளியூர்களில் பிரச்சாரத்தில் இருப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்றைய கூட்டத்தில் பா.ம.க- மதிமுக சார்பில் இரண்டாம் மட்டத் தலைகள் கூடமேடையேறவில்லை. ஆனாலும் இந்த இரு கட்சிகளின் தொண்டர்களும் ஏராளமான அளவில்தங்களது கொடிகளைப் பிடித்தபடி கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications