கருத்து கணிப்பு: லயோலா கல்லூரி முதல்வர் மீது வழக்கு
சென்னை:
கருத்துக் கணிப்பு நடத்தி தமிழகத்தில் திமுக கூட்டணி வெல்லும் என்று முடிவுகளை வெளியிட்ட சென்னைலயோலா கல்லூரி முதல்வர், விஷூவல் கம்யூனிகேஷன் துறை தலைவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜசீலி ஜான் என்பவர் இது தொடர்பாக தொடர்ந்துள்ளபொது நலன் மனுவில், மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதே ஒரு கல்லூரியின் கடமையாகும். அதைவிடுத்து ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு சாதகமாகவே கருத்துக் கணிப்புகளை வெளியிடுவது நியாயமானசெயலாக இருக்க முடியாது.
அரசியல் கண்ணோட்டத்துடன் நடத்தப்படும் இது போன்ற கருத்துக் கணிப்புகளால் லயோலா போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் பாரம்பரியமும், பெருமையும் கெடும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி தணிகாச்சலம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக மாநில அரசின் கருத்தைப் பதிவு செய்யுமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
லயோலா கல்லூரியின் விஷூவல் கம்யூனிகேஷன் துறை மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுககூட்டணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications