வாயில் எலியை கவ்வி...
பெரம்பலூர்:
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் ஜெய்சங்கர் வாயில் எலியை கவ்வியபடி வித்தியாசமானமுறையில் பிரசாரம் செய்து வருகிறார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவும், அதிமுக சார்பில்சுந்தரமும் போட்டியிடுகின்றனர். சுந்தரம் டாக்டர் என்பதால் பிரசாரத்தின் போது ஸ்டெத்தஸ்கோப் எடுத்துச் சென்றுவைத்தியம் பார்ப்பது, குழாயடியில் பெண்களுக்கு தண்ணீர் அடித்து தருவது என வாக்காளர்களைக் கவரப்பார்க்கிறார்.
இவருக்குப் போட்டியாக சுயேட்சை வேட்பாளரான ஜெய்சங்கர் என்பவரும் வித்தியாசமான பிரசாரத்தில்பெரம்பலூர் தொகுதியைக் கலங்கடித்து வருகிறார். இவர் துறைமங்கலத்தை சேர்ந்தவர்.
தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் குறைந்த வயது 28, குறைந்த படிப்பு (பிளஸ்- 2), குறைந்த வருமானம்உடைய வேட்பாளர் ஜெய்சங்கராகத்தான் இருக்க முடியும். இவர் வித்தியாசமாக மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
தற்போது பிரசாரத்திலும் வித்தியாசம் காட்டி வருகிறார். முதலில் மொட்டை போட திட்டமிட்டார். ஆனால் அதுவேட்பாளர் அடையாள பிரச்சினையில் சிக்கல் ஏற்படுத்தும் என நினைத்து முடிவை மாற்றிக்கொண்டார்.
பின்னர் தஞ்சை விவசாயிகள் வயிற்று பசிக்காக எலிக்கறி தின்ற கொடுமை நினைவுக்கு வர, எலியைப் பிடித்துவாயில் கவ்வியபடி தஞ்சை விவசாயியின் உருவில் மேல் சட்டை போடாமல் மாட்டு வண்டியில் நின்றவாறுபெரம்பலூர் நகரம் முழுவதும் வலம் வருகிறார்.
வாயில் கவ்வப்பட்ட எலி துடிக்கத் துடிக்க இவர் ஓட்டு கேட்டு வருகிறார். இதைப் பார்க்க கூட்டம் கூடுகிறதுஎன்றாலும், வாயில்லா ஜீவனை இவர் வாயில் கவ்வி துன்புறுத்துவதை பெரும்பாலானவர்கள் வரவேற்கவில்லை.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது











Click it and Unblock the Notifications