கள்ள வாக்காளர்களை தேடி ...
சென்னை:
கள்ள ஓட்டுப் போடுவதைத் தவிர்க்கும் முகமாக சென்னை விடுதிகள், கல்யாண மண்டபங்களில் வெளியூர்க்காரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து அதிகாரிகள் குழு தீவிர சோதனை நடத்தியது.
நாளை வாக்குப் பதிவு நடக்கவுள்ளதையடுத்து நேர்மையான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக கள்ள ஓட்டுப் போடுவதைத் தடுக்க பல முயற்சிகளைமேற்கொண்டுள்ளது.
அதில் ஒரு முயற்சியாக, சென்னையில் உள்ள விடுதிகள், கல்யாண மண்டபங்களில் வெளியூர்க்காரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்களா என்பதை சோதனையிட அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜ் தலைமையில் துணை ஆணையர்அபூர்வா, தென் சென்னை தொகுதி தேர்தல் அதிகாரி தர்மேந்திரா பிரதாப் யாதவ் ஆகியோர் கொண்ட குழு கல்யாணமண்டபங்கள், விடுதிகளுக்குச் சென்று சோதனையிட்டது.
வாக்குப் பதிவு முடியும் வரை இந்த சோதனை தொடரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், அதிமுகவினர்ஏராளமான அளவுக்கு வாக்குச் சாவடி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளதாகவும், இது குறித்துவிசாரணை நடந்து வருவதாகவும் ஆணையர் விஜயக்குமார் தெரிவித்தார்.
இதுதவிர கள்ள ஓட்டு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து வாக்காளர்கள் தகவல் தெரிவிக்க சென்னையில் உள்ள 14 சட்டசபைத்தொகுதிகளிலும் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுதவிர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமானரிப்பன் கட்டடத்திலும் சிறப்புப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்











Click it and Unblock the Notifications