விரைவில் வரப் போகிறது வீராணம் நீர்-- விடாமல் சொல்கிறார் ஜெ
சென்னை:
சென்னை நகருக்கு தேர்தலுக்குள் வீராணம் நீர் வந்து சேரும் என எதிர்க் கட்சிகளுக்கு சவால் விட்ட முதல்வர் ஜெயலலிதா, நாளைவாக்குப் பதிவு நடக்கவுள்ள நிலையில், விரைவில் வீராணம் குடிநீர் வரவுள்ளதாகக் கூறுகிறார்.
தென் சென்னை தொகுதியில் கடைசிக் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா ஈடுபட்டார். மயிலாப்பூர், கோட்டூர்புரம், அடையார்ஆகிய பகுதிகளில் அவர் அதிமுக வேட்பாளர் பதர் சையத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் குடிநீர்ப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க எனது அரசுகடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வீராணம் ஏரியில் நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. இதனால்இன்னும் சில நாட்களில் புதிய வீராணம் திட்டத்தின் கீழ் விரைவில் சென்னை நகருக்கு தண்ணீர் கிடைக்கும்.
புது வீராணம் திட்டம் தேவையில்லாதது, சாத்தியமில்லாதது என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் உலக வங்கி இந்தத்திட்டத்திற்கு கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்துள்ளது. ஒரு திட்டம் தவறு என்றால் உலக வங்கி பணம் கொடுக்குமா?என்றார் அவர். கோட்டூர்புரத்தில் தனது நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார் ஜெயலலிதா.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications