மலேசிய சிறையில் இருந்த தமிழர்கள் மீட்பு: தமிழக அரசு
சென்னை:
மலேசியாவில் வேலைக்காகச் சென்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 67 தமிழர்கள் விடுவிக்கப்பட்டு, அதில் 10பேர் நாடு திரும்பிவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கை காரணமாக அவர்களை விடுவிக்க மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம்மூலமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
மலேசியாவுக்கு வேலை வாங்கித் தருவதாக தமிழகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட 67 இளைஞர்கள்அங்கு ஒரு நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு இன்னல்பட்டு வருவது குறித்து பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர்ஜெயலலிதா கடந்த மாதம் 12ம் தேதி கடிதம் எழுதினார்.
இந்த 67 இளைஞர்களும் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைபடுத்தப்பட்டு வருவதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டிய முதல்வர், அவர்களை சிறையிலிருந்து விடுவிக்கவும், ஒப்பந்தப்படி வேலையும் சம்பளமும் கிடைக்கஏற்பாடு செய்யுமாறும் கடிதத்தில் கோரியிருந்தார்.
இவர்களில் யாராவது நாடு திரும்ப விரும்பினால் அதற்கும் உதவ வேண்டும் என்று கேட்டிருந்தார் ஜெயலலிதா.
இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடந்த 29ம் தேதி தமிழக அரசுக்கு பதில் கடிதம்அனுப்பியுள்ளார். அதில், தமிழர்களை மீட்க மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமாக நடவடிக்கைஎடுக்கப்பட்டதாகவும், இதையடுத்து 10 தமிழர்கள் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டு திரும்ப தமிழகத்துக்குவந்துவிட்டதாகவும் சின்ஹா தெரிவித்துள்ளார்.
மற்றவர்கள் மாற்று வேலைவாய்ப்பை ஏற்க சம்மதித்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களில் யாராவதுநாடு திரும்ப விரும்பினாலும் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சின்ஹா கூறியுள்ளார்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications