நாளை வாக்கு பதிவு: முன்னெச்சரிக்கையாக 2,000 ரெளடிகள் கைது
சென்னை:
தமிழகத்தில் நாளை ஓட்டுப் பதிவு நடைபெறவுள்ளதையடுத்து தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2000 சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உள்பட மொத்தம் 16 மாநிலங்களைச் சேர்ந்த 182 தொகுதிகளுக்கு நாளை இறுதிக் கட்டவாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. இன்று காலை முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்மற்றும் பிற பொருட்கள் விநியோக மையத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு கொண்டுசெல்லப்படுகிறது.
வாக்குச் சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 13 தொகுதிகளை மிக மிக பதற்றம்கொண்ட தொகுதிகளாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு அதிரடிப்படையினரும் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 2,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 300 சமூகவிரோதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையின் மூன்று தொகுதிகளையும் கண்காணிக்க சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகளை போலீசார் அமைத்துள்ளனர்.சென்னையில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு 15,000 போலீசார் ஒதுக்கபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1 லட்சம் மத்திய,மாநிலப் போலீஸ் படைகள், துணை ராணுவப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications