முதல் நபராய் வாக்களித்த அப்துல் கலாம்
டெல்லி:
குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் நபராக வாக்களித்தார். ஆனால், ராமேஸ்வரத்தில் வசித்து வரும் அவரது 86 வயதுஅண்ணனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவரால் வாக்களிக்க முடியவில்லை.
மாளிகைக்குள் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்குசரியாக காலை 7 மணிக்கு வந்த கலாம், முதல் நபராக வாக்களித்தார்.
வாக்களித்த பின் நிருபர்களிடம் அவர் கூறுகையில், வாக்களிக்கும் எனது உரிமையைநிறைவேற்றுவதில் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். மின்னணு வாக்குப் பதிவுஎந்திரத்தில் ஓட்டு போடுவது மிக அற்புதமான அனுபவம் என்றார்.
ஆனால், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கானவாக்காளர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அண்ணனும்விதிவிலக்கல்ல.
ராமேஸ்வரத்தில் வசித்து வரும் கலாமின் அண்ணன், முகம்மது முத்து மீரான் லெப்பையின் பெயர் வாக்காளர்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் அவராலும் அவரது மகன் ஜெயினுலாப் தீனாலும் வாக்களிக்கமுடியவில்லை. ஆனால், மருமகள் மற்றும் பேரனின் பெயர்கள் பட்டியலில் இருந்ததால் அவர்கள் வாக்களித்தனர்.
பல காலமாக வாக்களித்து வந்த தனது பெயர் எப்படி விடுபட்டது என்று முகம்மது மீரானுக்கும் புரியவில்லை. இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், டவுன் பகுதியான ராமேஸவரத்திலேயே இப்படி என்றால் கிராமப் பகுதிகளில்உள்ள வாக்காளர்களின் நிலை என்ன? என்றார்.
-சோனியா வாக்களிப்பு:
இந் நிலையில் சோனியா காந்தி டெல்லி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நிர்மன் பவன் வாக்குச் சாவடியில்வாக்களித்தார். அப்போது டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், டெல்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மேகன்ஆகியோர் சோனியாவுடன் இருந்தனர்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துஇப்போது எதுவும் கூற முடியாது. தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை நாங்கள் காத்திருப்போம் என்று கூறினார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications