வாக்காளர் பட்டியலில் லட்சக்கணக்கானோர் பெயர் நீக்கம்: மக்கள் கொந்தளிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் வாக்காளர்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால் ஆண்டாண்டு காலமாய் வாக்களித்தவர்களால் இம் முறைவாக்களிக்க முடியமல் போய்விட்டது.

இவர்களில் பெரும்பாலானவர்களிடம் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது. இதனால் வாக்குச் சாவடிக்கு வந்துவிட்டு வாக்களிக்க முடியாமல் திரும்பிய மக்கள் ஆங்காங்கேபோராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல பகுதிகளில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வாக்குகள் விழுந்த இடங்களை எல்லாம் அடையாளம் கண்டு அந்தப்பகுதியில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை ஆளும் கட்சியினர், அதிகாரிகளின் உதவியோடு அல்லதுஅதிகாரிகளை மிரட்டி நீக்கிவிட்டதாக எதிர்க் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் புகார்களைக் குவித்ததுகுறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் வாக்குப் பதிவு தினமான இன்று சென்னை உள்ளிட்ட நகர்ப் பகுதிகளில் பெரும் குழப்பம்ஏற்பட்டது. திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின்பெயர்கள் இன்று வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.

குறிப்பாக அரசு ஊழியர் குடியிருப்புகளில் நிலைமை படுமோசம். அங்கு பெரும்பாலான வாக்குகள்நீக்கப்பட்டிருந்தன. சென்னையில் அரசு ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ள பட்டினப்பாக்கம், பீட்டர்ஸ் காலனி,சைதாப்பேட்டை, கே.கே. நகர், தாடண்டர் நகர், லாயிட்ஸ் காலனி, நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் அரசுஊழியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் கொத்தாக நீக்கப்பட்டிருந்தன.

அடுக்குமாடிக் குடியிருப்புகள், வங்கி ஊழியர் காலனிகள் ஆகிய பகுதிகளிலும் இதே நிலைதான்.

கணவன் பெயர் பட்டியலில் உள்ளது, ஆனால் மனைவிக்கு ஓட்டு இல்லை. இதேபோல, தந்தை, தாயின் பெயர்வாக்காளர் பட்டியலில் இல்லை ஆனால், அவர்களது குழந்தைகளின் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவேடிக்கை பல பகுதிகளில் நிலவியது.

தாம்பரம், பூந்தமல்லி, கோடம்பாக்கம், போயஸ் கார்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் கொத்துக் கொத்தாக பலவாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் இப் பகுதிகளில் வாக்குச் சாவடிகள் முன்புவாக்காளர்கள் பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரையிலும்...

மதுரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறி, ஓட்டு போட அனுமதிக்கப்படாத,ஆயிரக்கணக்கான பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை கே.புதூர், ஜெய்ஹிந்த்புரம், டி.ஆர்.ஓ. காலனி, செல்லூர்-மீனாம்பாள்புரம் ஆகிய பகுதிகளில் இந்தசாலை மறியல் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர்.

மதுரை தொகுதியில் மொத்தம் 14.30 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்புப்பணிக்குப் பிறகு இது 13.45 லட்சமாக குறைந்தது. 85,000 வாக்காளர்களுடைய பெயர்கள் பட்டியலிலிருந்துநீக்கப்பட்டுள்ளன.

திருச்சியில்...

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் 2,700 அரசு ஊழியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில்இருந்து நீக்கப்பட்டிருந்தன.

கடலூரில் 80,000 வாக்குகள் மாயம்:

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் சுமார் 80,000 வாக்காளர்களின் பெயர்கள்மாயமாகியுள்ளன.

இதே போல காஞ்சிபுரம், கோவை, திருச்சி, கடலூர் உள்பட மாநிலம் முழுவதும் பல வாக்குச் சாவடிகளில்ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறாததால் அங்கெல்லாம் பிரச்சனை வெடித்தது.வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தும் தங்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து வாக்காளர்கள்போராட்டங்கள் நடத்தினர்.

இந் நிலையில் வாக்காளர் பட்டியல் குளறுபடிக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என்று முதல்வர்ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+