ரஜினி ரசிகர்கள் பாமக-திமுகவினர் மோதல்
விழுப்புரம் & மதுரை:
விழுப்புரத்திலும் மதுரையிலும் ரஜினி ரசிகர்களுக்கும் பா.ம.க, திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
திண்டிவனம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட விழுப்புரம் கப்பியாம்புலியூர் பகுதியில் வாக்குப் பதிவு நடந்தபோது அங்கு வந்த ரஜினி ரசிகர்களுக்கும் பா.ம.கவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். பா.ம.கவினர் தாக்கியதில் ரவி என்ற ரஜினி ரசிகர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து பா.ம.கவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ரஜினி ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து வந்து அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
திமுக-ரஜினி ரசிகர்கள் மோதல்:
மதுரையில் திருப்பரங்குன்றம் அருகே ரஜினி ரசிகர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ரஜினி ரசிகர்களை திமுகவினர் தாக்க முயன்றபோது போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் கலைத்தனர்.
ஏ.கே. மூர்த்தியின் கார் மீது கல்வீச்சு:
இதற்கிடையே செங்கல்பட்டு தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி சென்ற கார் மீது அதிமுகவினர் கல் வீசி தாக்கினர்.
போலீசார் விரைந்து வந்து கும்பலை விரட்டியடித்தனர். இதில் மூர்த்தி காயமின்றி தப்பினார். கார் லேசான சேதம் அடைந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications