இரட்டை இலைக்கு வாக்களித்த ஜக்குபாய்
சென்னை:
அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த இன்று காலை 10.35 மணிக்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரி வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்தார். அவருடன் சத்யநாராயண ராவும் வந்தார்.
வரிசையில் நின்ற வாக்காளர்களின் பின்னால் போய் ரஜினி நின்றார். ஆனால், அடுத்த 5 நிமிடத்தில் அவர்முன்னதாக சென்று வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து 10.40 மணிக்கு விறுவிறுவெனவரிசையை விட்டு முன்னால் போன ரஜினி வாக்களித்துவிட்டுத் திரும்பினார்.
பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக கூட்டணிக்கு எனது ஆதரவைத்தெரிவித்துள்ளேன். அந்தக் கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு வாக்களித்தேன் என்றார். மேற்கொண்டு எந்தக்கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.
சில வாரங்களுக்கு முன் நிருபர்களிடம் மனம் திறந்த ரஜினி, அரசியலில் எனக்குப் பிடிக்காதது ஊழல், வன்முறை.இதனால் நான் பா.ஜ.கவுக்கு வாக்களிக்கப் போகிறேன, ரசிகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்என்றார்.
ஆனால், இவரது போயஸ்கார்டன் பகுதி தென் சென்னையின் கீழ் வருகிறது. இத் தொகுதியில் பா.ஜ.க.போட்டியிடவில்லை. அந்தக் கூட்டணியின் சார்பில் அதிமுக வேட்பாளர் பதர் சயீத் களத்தில் உள்ளார்.
இதனால் ரஜினி என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்தது. இன்று அதிமுகவுக்கு ஓட்டு போட்டுவிட்டதன் மூலம்,கேள்விக்கு விடையளித்துவிட்டார் ரஜினி. கடந்த இரு தேர்தல்களிலும் அதிமுகவை மிகக் கடுமையாகவிமர்சித்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல நடிகர் விஜயகாந்த், விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் மனைவி பிரேமலதாவுடன் சென்றுவாக்களித்தார்.
நடிகர் சரத்குமார், மனைவி ராதிகாவுடன் கொட்டிவாக்கம் வாக்குச் சாவடியில் வாக்களித்தார். நெப்போலியன்,மனைவியுடன் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
நடிகர் டி.ராஜேந்தர், மகன் சிம்பு இருவரும் தி.நகர் இந்தி பிரசார சபாவில் வாக்களித்தனர். நடிகர் கமல்ஹாசன்ஆழ்வார்பேட்டை மாநகராட்சி பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். நடிகர் பிரசாந்த் தி.நகர் பள்ளி வாக்குச்சாவடியிலும், நடிகை குஷ்பு நந்தனம் பாஸ்டன் பள்ளியிலும் வாக்களித்தனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications