நாளை திமுக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை
சென்னை & டெல்லி:
அனைத்து கட்டத் தேர்தல்களும் முடிவடைந்து, மத்தியில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என கருத்துக் கணிப்புகள்தெரிவிக்கும் நிலையில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளைசென்னையில் நடக்கிறது.
அதே போல காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டம் 13ம் தேதி சோனியா காந்தி தலைமையில்டெல்லியில் நடக்கிறது.
கருத்துக் கணிப்புகளில் தமிழகம் மற்றும் புதுவையில் 31 தொகுதிகள் வரை திமுக கூட்டணிக்குக் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
இந் நிலையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது.தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் நிலையில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து இக் கூட்டத்தில்ஆலோசிக்கப்படவுள்ளது.
மேலும், லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டது, சிவகாசியில் அமைச்சர் இன்பத் தமிழன் தொடர்பானசர்ச்சை ஆகியவை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளும் விவாதிக்கப்படவுள்ளன.
இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கூட்டம் காலை 10 மணிக்கு அண்ணாஅறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கில் நடைபெறும். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளதால்,அனைத்துத் தலைவர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications