இன்றும் அதிமுக- திமுக, மதிமுகவினர் மோதல்
விருதுநகர்:
சிவகாசி தொகுதியின் பல பகுதிகளிலும், குறிப்பாக விருதுநகரில் அதிமுக மற்றும் மதிமுக-திமுக தொண்டர்களுக்கு இடையேமோதல் வெடித்துள்ளது.
மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனுக்கும் அமைச்சர் இன்பத்தமிழனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில்,துப்பாக்கியால் அமைச்சர் தரப்பு சுட, அவர் மீது அரிவாளால் தாக்குதல் நடந்தது.
இதையடுத்து சிவகாசி தொகுதியில் அதிமுகவினருக்கும் திமுக, மதிமுக தொண்டர்களுக்கும் இடையே ஆங்காங்கே சண்டைமூண்டுள்ளது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர்.
விருதுநகரில் உள்ள திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வீட்டின் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளைவீசித் தாக்கினர். இதில், வீட்டில் இருந்த இரு கார்களும், ஜீப்களும் சேதமடைந்தன. மேலும் அவரது மில்லுக்கு தீ வைத்தனர்.இதில் அந்தக் கட்டடம் சேதமடைந்தது.
இதேபோல விருதுநகர் ஒன்றிய திமுக செயலாளர் ராஜாக்கனியின் வீட்டிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்டஅதிமுகவினர் ராஜாக்கனியின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.
சிவகாசியில் வைகோவின் தேர்தல் அலுவலகத்தின் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியது.
இதையடுத்து விருதுநகரில் அதிமுக அலுவலகத்தை திமுக-மதிமுக தொண்டர்கள் சூறையாடி தீ வைத்தனர். மேலும் அதிமுகமாவட்டச் செயலாளர் முத்துராமனின் பைக்கும் தீ வைத்து எரிக்கப்பட்டது இதனால் அப் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
இதற்கிடையே மக்களிடம் அரிவாள் வெட்டி வாங்கி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளஇன்பத்தமிழன் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா கடந்த மூன்றாண்டு காலமாக அமைதியை நிலைநாட்டி வைத்துள்ளார். அதைக் கெடுக்கமதிமுக முயல்கிறது.
மதிமுகவினரால் சிறை வைக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை மீட்கவே நான் வெங்கடாசலபுரத்துக்குச் சென்றேன். அப்போதுரவிச்சந்திரனின் ஆட்கள் 100 பேர் எனது காரை வழிமறித்துத் தாக்கினர். இதில் எனது பாதுகாப்பு அதிகாரிக்கு வாயிலும்கழுத்திலும் வெட்டு விழுந்தது. எனது டிரைவரும் காயமடைந்தார்.
நான் தப்பி இன்னொரு காரில் ஏற முயன்றேன். ஆனால், ரவிச்சந்திரன் என்னைப் பிடித்துக் கொண்டார். என் ஜாதிப் பேரைசொல்லித் திட்டபடி அவர் என்னைத் தாக்கினார் என்றார்.
அமைச்சரைப் பாதுகாக்கவே வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாவலர் ராஜாராம் கூறினார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications