பாமக-விடுதலைச் சிறுத்தைகள் மோதல்: கடலூரில் பதற்றம்
சிதம்பரம்:
சிதம்பரத்தில் பா.ம.கவினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், சிதம்பரம் தொகுதி பாமக வேட்பாளருமான பொன்னுச்சாமி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர்லேசான காயமடைந்தார். இதையடுத்து தலித்களின் வீடுகளை பாமகவினர் சூறையாடினர்.
சிதம்பரம் தொகுதியில் வாக்குப் பதிவு நடந்தபோது தொண்டமாநத்தம் என்ற கிராமத்தில் இந்த இரு கட்சியினருக்கும் இடையேமோதல் மூண்டது. இதில் 5 பேர் காயமடைந்தனர், தலித் மக்களின் சில வீடுகளும் தாக்கப்பட்டன.
இந்த மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பா.ம.கவினரை பொன்னுச்சாமி, பண்ருட்டி பாமகஎம்.எல்.ஏ வேல்முருகன் உள்ளிட்டவர்கள் இன்று காலை சென்றனர். மருத்துவமனையிலிருந்து திரும்பி வரும்போது ராணிகாலனி என்ற தலித் குடியிருப்புப் பகுதியில் அவர்களது கார்கள் சென்றன.
அப்போது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் பொன்னுச்சாமி மற்றும் வேல்முருகனின் கார்கள் மீது தாக்குதல் நடத்தினர்.இதில் கல் அடிபட்டு பொன்னுச்சாமி லேசான காயமடைந்தார். வேல்முருகனின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் ராணி காலனி பகுதியில் உள்ள 12 வீடுகளை அடித்து நொறுக்கினர். 4 வீடுகளுக்குதீவைத்தனர். சம்பவத்தையடுத்து போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் கடலூர் மாவட்டம்முழுவதுமே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்த மோதல்கள் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் தந்துள்ளனர். இதையடுத்து வேல்முருகன் மீதுபோலீசார் கொலை முயற்சி வழக்கை பதிவு செய்தனர்.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications