30 வாக்கு சாவடிகளில் அமைதியான மறுவாக்கு பதிவு
சென்னை:
தமிழகத்தின் 13 தொகுதிகளில் உள்ள 30 வாக்குச் சாவடிகளில் இன்று அமைதியான முறையில் மறு வாக்குப் பதிவுநடந்தது.
வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடிகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறுகாரணமாக 40க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்தப்படவேண்டும் என்று தேர்தல்ஆணையத்திற்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இந்த கோரிக்கையைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் கரூர் தொகுதியில் 11 வாக்குச் சாவடிகளிலும், திண்டுக்கல்,தென்காசி, திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளில் தலா 3 வாக்குச் சாவடிகளிலும், வந்தவாசி தொகுதியில் இரண்டுவாக்குச் சாவடியிலும்,
தென் சென்னை (ஆலந்தூர்), மத்திய சென்னை (புளியந்தோப்பு), திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருச்செங்கோடு,நீலகிரி, பழனி, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வாக்குச் சாவடியிலும் இன்று மறுவாக்குப் பதிவு நடத்தஉத்தரவிட்டது.
இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு இங்கு மறு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.மறு வாக்குப் பதிவுக்காக புதிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
மத்திய சென்னையில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத இருவர் ஓட்டுப் போட முயன்றனர். அவர்களைஅதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மற்றபடி, பலத்தபாதுகாப்புடன் அமைதியாக வாக்குப் பதிவு நடந்தது.
மறு வாக்களிக்கும் மக்களின் ஆள்காட்டி விரலுக்குப் பதிலாக நடுவிரலில் மை வைக்கப்பட்டது.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications