இன்பத்தமிழன், ரவிச்சந்திரன் மீது வழக்குகள் பதிவு
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் என்ற இடத்தில் நடந்த மோதல் தொடர்பாக அமைச்சர்இன்பத்தமிழன், சிவகாசி தொகுதி மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் ஆகியோர் மீது சாத்தூர் நகரபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வெங்கடாசலபுரம் அருகே சிப்பிப்பாறை ரவிச்சந்திரனின் காரை வழிமறித்து நிறுத்தி அவர் மீது துப்பாக்கியால்சுட்டதாக இன்பத்தமிழன் மீது புகார் எழுந்துள்ளது. இதேபோல, மதிமுகவினர் இன்பத்தமிழனை சூழ்ந்து கொண்டுதாக்கியதாக அதிகவினர் புகார் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக சாத்தூர் நகர காவல் நிலையத்தில்இரு தரப்பினரும் புகார் கொடுத்துள்ளனர். இன்பத்தமிழன்கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி மதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரன், வெங்கடாசலபுரம் பஞ்சாயத்து தலைவர்திருவேங்கடசாமி ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல ரவிச்சந்திரன் சார்பில் சந்திரசேகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், இன்பத்தமிழன்உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக, அதிமுக, மதிமுகவினர் மோதும் சூழ்நிலை உள்ளதால்,பதற்றமான பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாத்தூர், வெங்கடாசலபுரம், மேட்டமலை,முக்குராந்தல் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications