தமிழகம் பீகாராக மாறி வருகிறது: வைகோ
விருதுநகர்:
தமிழகம் பீகாராக மாறி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
விருதுநகரில் திமுக நகரச் செயலாளர் ராஜாக்கனியின் வீடு தாக்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற வைகோராஜாக்கனியின் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தைக் கேட்டறிந்தார்.
இதன் பின் நிருபர்களிடம் பேசிய வைகோ, சிவகாசி தொகுதி மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனைக்கொன்றுவிட்டு மறு தேர்தல் நடத்தும் திட்டத்துடன் தான் அவர் மீது துப்பாக்கியால் சுட்டிருக்கிறார் அமைச்சர்இன்பத்தமிழன்.
தோல்வி பயத்தால், தனது அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்த வேலையை அவர் செய்துள்ளார்.ஆனால், நடந்த சம்பவத்தை அப்படியே திரித்து போலீசாரிடம் கூறியிருக்கிறார். அவர்களும் அமைச்சர்சொன்னபடியே வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
ரவிச்சந்திரன் அமைதியான சுபாவம் கொண்டவர், தன் மீதான தாக்குதலின்போதும் கூட அளவுக்கு மிஞ்சியபொறுமை காட்டியுள்ளார். தகாத வார்த்தைகளைப் பேசக்கூடிய நபர் அல்ல அவர்.
கடந்த கால மோதல்களில் இருந்து விடுபட்டு விருதுநகர் அமைதியாக இருக்கும் சூழலில் அமைதியைக் குலைக்கஇந்த முயற்சி நடந்துள்ளது. நாங்களும் கூட்டணிக் கட்சியினரும் பொறுமை காட்டியதால் நடக்க இருந்த விபரீதம்தவிர்க்கப்பட்டுள்ளது.
தேர்தல் தினத்தன்று என்னையும் கூட சிவகாசியில் வைத்து தாக்க திட்டமிட்டிருந்தனர். சாத்தூர் ராமச்சந்திரனின்தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசியிருக்கின்றனர். திமுகவினரின் வீடுகளைத் தாக்கியுள்ளனர்.
இந்த ஆட்சியில் தமிழகம் பீகாராக மாறி வருகிறது. அமைச்சர் சுட்டார் என்பதற்கு கிராம மக்களே சாட்சி.வானத்தை நோக்கி சுட்டிருந்தால் தரையில் இருக்கும் காரில் எப்படி குண்டு பாய்ந்திருக்கும்? ரவிச்சந்திரனின் கார்என்ன பறக்கும் காரா? என்று கேட்டார் வைகோ.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications