பாஜகவை கவிழ்த்த கூட்டணி கட்சிகள்
பெங்களூர்:
காங்கிரசை விட 0.12 சதவீதம் அதிக வாக்குகளை வென்றாலும், கூட்டணிக் கட்சிகள் படுதோல்வி அடைந்ததால்பா.ஜ.கவால் அதிக இடங்களைப் பிடிக்க முடியாமல் போய்விட்டது.
அதே நேரத்தில் கடந்த மக்களவைத் தேர்தலைவிட 1.5 சதவீதம் குறைவாக வாக்குகளையே பெற்றுள்ளகாங்கிரசால் கூட்டணிக் கட்சிகளின் உதவியால் அதிக இடங்களைப் பிடிக்க முடிந்துள்ளது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் 35.19 சதவீத ஓட்டுக்களையும், பா.ஜ.க 35.31 சதவீதவாக்குகளையும் வென்றுள்ளது. பாஜகவுக்கு கடந்த தேர்தலை விட இந்த இம்முறை 1.68 சதவீத வாக்குகள்குறைவாகவே கிடைத்துள்ளன
இதனால் காங்கிரஸ் தனியாக 145 இடங்களை வென்றுள்ள நிலையில் பா.ஜ.கவால் 137 இடங்களை மட்டுமேபிடிக்க முடிந்துள்ளது. காங்கிரசுக்கு கடந்த தேர்தலைவிட ஒரு சீட் அதிகம் கிடைத்துள்ளது. பாஜகவோ 44இடங்களை இழந்துள்ளது.
இந்தத் தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சி என்ற நிலையை காங்கிரஸ் அடைந்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜன் சக்தி ஆகியவை பீகாரிலும், திமுக, மதிமுக,பா.ம.க. ஆகிய கட்சிகள் தமிழகத்திலும், தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி ஆந்திரத்திலும் பெரும் வெற்றிபெற்றுள்ளன.
ஆனால், பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகளான அதிமுக தமிழகத்திலும், தெலுங்கு தேசம் ஆந்திராவிலும், ஐக்கியஜனதா தளம் பீகார் மற்றும் ஜார்க்கண்டிலும், திரிணமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திலும் படுதோல்வியைசந்தித்துள்ளன.
மகாராஷ்டிரத்தில் இதன் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் எதிர்பார்த்த இடங்களைப் பிடிக்கவில்லை.
ஹரியாணாவில் பா.ஜ.கவை விட்டு லோக்தளம் விலகியதால் அங்கு 9 இடங்களை பா.ஜ.க. இழந்துள்ளது.குஜராத்தில் 26 இடங்களில் அனைத்தையும் பா.ஜ.கவே வெல்லும் என எதிர்பார்த்த நிலையில் 12 இடங்களைகாங்கிரஸ் வென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல பா.ஜ.கவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்ட மாநிலம் உத்தரப் பிரதேசம். அங்கு சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடைத்தையே பிடித்துள்ள பா.ஜ.கவுக்கு வெறும் 11 இடங்களேகிடைத்துள்ளன.
இங்கு மொத்தம் 80 தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை 30 இடங்களாவது கிடைக்கும் எனபா.ஜ.க. கருதி கடுமையாக பிரச்சாரம் செய்தது.
அதே போல இமாச்சலப் பிரதேசத்திலும் பா.ஜ.கவுக்கு தோல்வியே கிடைத்துள்ளது.
பா.ஜ.கவை காப்பாற்றிய மாநிலங்கள் கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தான். இந்தமூன்று மாநிலங்களிலும் இக் கட்சிக்கு 64 இடங்கள் கிடைத்துள்ளன. இம் மூன்றிலும் காங்கிரஸ் படுதோல்விகண்டுள்ளது.
இது தவிர பஞ்சாபிலும் அக் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆலோசனை:
தேர்தலில் கட்சிக்கு தேசிய அளவில் ஏற்பட்ட மாபெரும் சரிவு குறித்து இன்று பிரதமர் வாஜ்பாய் தலைமையில்கூடிய பா.ஜ.கவின் நாடாளுமன்ற உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் அத்வானி,வெங்கையா நாயுடு, பிரமோத் மகாஜன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதிமுக மீது தாக்கரே பாய்ச்சல்:
தமிழத்திலும் ஆந்திராவிலும் பா.ஜ.கவுக்கு தோல்வி ஏற்பட அதிமுக, தெலுங்கு தேசம் போன்ற மக்களால்நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடன் கூட்டணி தான் காரணம் என பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிவசேனைத் தலைவர்பால்தாக்கரே கூறியுள்ளார்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications